கனகமாலையார் இலம்பகம் |
1048 |
|
|
1854 |
பொருகய லுகளிப் பாயப் | |
|
பூஞ்சிறைக் குமரி யன்னங் | |
|
குருகினோ டிரியச் செந்நெற் | |
|
கொழுங்கதிர் குவளை யெற்ற | |
|
முருகுவிண் டிரியத் தீந்தேன் | |
|
முழங்குநீர்க் கழனி நன்னா | |
|
டெரியுமிழ்ந் திலங்கும் வேலோ | |
|
யேமமாங் கதம தென்றான். | |
|
(இ - ள்.) எரி உமிழ்ந்து இலங்கும் வேலோய் - தீயைச் சொறிந்து விளங்கும் வேலனே!; பொருகயல் உகளிப் பாய- பொருகின்ற கயல்மீன்கள் பிறழ்ந்து பாய்தலினாலே; பூஞ்சிறைக் குமரி அன்னம் - குருகினோடு இரிய - (அஞ்சிய) அழகிய சிறகினையுடைய அன்னமும் நாரையும் ஓடுதலின்; செந்நெல் கொழுங்கதிர் குவளை எற்ற - (அவற்றின் மெய் தீண்டி) வளவிய செந்நெற் கதிர் குவளைமேல் எற்றுதலின்; முருகு விண்டு இரிய - நறுமணம் விட்டு உலவ; தீ தேன் முழங்கு நீர்க் கழனி நன்னாடு - இனிய தேன் கலந்து முழங்கும் நீரையுடைய கழனிகள் சூழ்ந்த அழகிய நாடு; ஏமமாங் கதமது என்றான் - ஏமாங்கதம் என்றான்.
|
(வி - ம்.) உகளுதல் - பிறழ்தல், பூஞ்சிறை - அழகிய சிறகு. குமரியன்னம் - இளைய அனைப் பெடை. குருகு - நாரை முருகு - மணம், எரி - தீ, ஏமாங்கதம் ஏமமாங்கதம் என விரிந்தது. அது : பகுதிப்பொருளது.
|
( 298 ) |
1855 |
பூந்துகிற் கொடுத்த தீந்தே | |
|
னகிற்புகை பொன்ன னார்தங் | |
|
கூந்தலிற் குளித்த வண்டு | |
|
கொப்புளித் திட்ட வாச | |
|
மாந்தர்மேற் றவழ்ந்து மாட | |
|
மிருள்படப் புதையுஞ் செல்வத் | |
|
தேந்துபொன் னிஞ்சி மூதூ | |
|
ரிராசமா புரம தென்றான். | |
|
(இ - ள்.) பூதுகில் கொடுத்த தீ தேன் அகிற்புகை - அழகிய ஆடைக்கு ஊட்டிய இனிய தேன் கலந்த அகிலின் புகையும்; பொன் அனார்தம் கூந்தலில் குளித்த வண்டு கொப்புளித்திட்ட வாசம் - திருவனைய மகளிரின் கூந்தலிலே முழுகிய வண்டு கொப்புளித்திட்ட மணமுறு தேனும்; மாந்தர் மேல் தவழ்ந்து - மக்களின்மேல் தவழ; மாடம் இருள்பட -
|