பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1049 

மாடங்கள் இருள் படுமாறு; புதையும் செல்வத்து - அம்மாடங்கள் புதையும் செல்வத்தினையும்; ஏந்து பொன் இஞ்சி மூதூர் - உயர்ந்த பொன் மதிலையும் உடைய பழம்பதி; இராசமாபுரமது என்றான் - இராசமாபுரம் என்றான்.

   (வி - ம்.) துகிற்குக் கொடுத்த புகை என்க. தேன் கலந்த புகை என்க. பொன் - திருமகள். கொப்புளித்திட்ட; ஒரு சொல் . தவழ்ந்து - தவழ பொன்னிஞ்சி - பொன்னாலியன்ற மதில். இராசமாபுரமது என்புழி அது பகுதிப்பொருளது.

( 299 )
1856 எங்குல மடிகள் கேட்க
  வென்றலு மெழுந்தோர் பூசல்
பொங்குளைப் புரவி வெள்ளம்
  போக்கற வளைத்து முற்றி
யிங்குள நிரையை யெல்லாங்
  கவர்ந்ததென் றிட்ட போழ்தே
திங்கள் வெண்குடையி னான்றன்
  றிருச்செவிக் கிசைத்த தன்றே.

   (இ - ள்.) எம்குலம் அடிகள் கேட்க என்றலும் - இனி, எம் குலத்தினை அடிகள் கேட்க என்று நந்தட்டன் உரைத்த அளவிலே; இங்குள நிரையையெல்லாம் போக்குஅற - இங்குள்ள ஆனிரைகளையெல்லாம் தப்பாதபடி; பொங்கு உளைப்புரவி வெள்ளம் முற்றி வளைத்து கவர்ந்தது என்று - கிளரும் உளையையுடைய குதிரைத் திரள் சூழ்ந்து வளைத்துக் கவர்ந்துகொண்டது என்று; ஓர் பூசல் இட்டபொழுது - ஆயர் ஒரு பூசலை எழுப்பியதனால்; திங்கள் வெண்குடையினான் தன் திருச் செவிக்கு இசைத்தது அன்றே - வெண்மையான திங்கள் போலுங் குடையையுடைய தடமித்தனின் திருச் செவியிலே அப்பூசல் பட்டது.

   (வி - ம்.) என்றலும் - என்று நந்தட்டன் கூறியபொழுது. பூசல் இட்டபொழுது என ஒட்டுக. அப்பூசல் எனச் சுட்டு வருவித்துக் கொள்க. குடையினான் - தடமித்தன்.

( 300 )
1857 எரித்திறல் வென்றி வேந்தற்
  கிற்றென விசைப்பச் சீறி
மருப்புறக் கந்து பாய்ந்து
  முழங்குமால் களிறு போலத்
திருக்கிளர் மணிசெய் பொற்றூண்
  டீப்படப் புடைத்துச் செங்க
ணுருத்தெரி தவழ நோக்கி
  யுடல்சினங் கடவச் சொன்னான்.