| நாமகள் இலம்பகம் |
105 |
|
|
தேன்தவழும் மாலையை அணிந்த விசயை(யின் அல்குலைப் பருகும்போது அவள்) செவ்வி குலையாத தாமரைப் பூவாகவே எப்போதும் இருக்க; உமிழ்நகை வேலினானும் ஒண்சிறை மணிவண்டொத்தான் - ஒளிவிடும் வேலினான் ஒள்ளிய சிறகுகளையுடைய நீலநிற வண்டைப் போன்றான்.
|
|
|
(வி - ம்.) 'இவை ' என்றது கரும்பையும் தாமரைப் பூவையும். கரும்புவமை நெருக்கி நீர் நுகர்தற்கு. பூவதாக - பூவினது தன்மை எக்காலமும் உண்டாக - இது வேறுபாடின்மையின் வேறுபடவந்த உவமமாயிற்று; எனவே 1பதுமயோனியாம். 'வேலினானும்' என்றது களிறுபோல வன்மையுடையோனும் என்றவாறு. உம்மை: உயர்வு சிறப்பு.
|
|
|
செவ்வி: குலையாதிருக்க நுகர்வதொரு வண்டு இல்பொருளுவமை.
|
( 162 ) |
| 192 |
பளிக்கறைப் பவழப் பாவை பரிசெனத் திகழுஞ் சாயற் |
| |
களிக்கயல் பொருவ போன்று கடைசி வந் தகன்ற கண்ணா |
| |
ளொளிக்கவின் கொண்ட காமத் தூழுறு கனியை யொத்தா |
| |
ளளித்தயில் கின்ற வேந்த னஞ்சிறைப் பறவை ஒத்தான். |
|
|
(இ - ள்.) பளிங்கு அறை பவழப் பாவைப் பரிசு எனத் திகழும் சாயல் - பளிங்குப் பாறையை அடுத்த பவழப்பாவை இவளது தன்மை என விளங்கும் மென்மையையும்; களிக்கயல் பொருவபோன்று கடைசிவந்து அகன்ற கண்ணாள் - களிப்பையுடைய கயல்கள் தம்மிற் பொருவன போன்று பொருது கடைசிவந்து அகன்ற கண்களையும் உடைய விசயை; ஒளிக்கவின் கொண்ட காமத்து ஊழுறு கனியை ஒத்தாள் - ஒளியையும் அழகையுங் கொண்ட, விருப்பம் ஊட்டும் முதிர்ந்த கனியைப் போன்றாள்; அளித்து அயில்கின்ற வேலான் அம்சிறைப் பறவை ஒத்தான் - அவளுக்கு மேன்மேலும் விருப்பத்தையூட்டி நுகரும் சச்சந்தன் அழகிய சிறகையுடைய வாவலைப் போன்றான்.
|
|
|
(வி - ம்.) பளிக்குப் பாறையை அடுத்த பவழப்பாவை இவளது தன்மையெனத் திகழும் சாயல். ஈண்டு ஒளியது மென்மை; இது செயற்கை நலம். இதற்கு அடுத்தது காட்டும் பளிங்கைப் (குறள், 70) பவழம் தன் தன்மையாக்கினாற்போல, அடுத்த மகளிர் தன்மையனாம் அரசனை இவளும் தன் தன்மையே ஆக்கிக்கொண்டாளெனக் கதைகனி. அயிறல் - உண்டல். 'உண்டற்குரிய அல்லாப் பொருளை - உண்டனபோலக் கூறலும் மரபே' (தொல். பொருளியல்- 19) 'தோணலமுண்டு துறக்கப்பட்டோர் (கலி . 23) என்றார் பிறரும். பழமும் வாவலும் வடுப்பட நுகர்தற்குவமை.
|
( 163 ) |
|
|
1. சீவக. 218. உரை.
|
|