கனகமாலையார் இலம்பகம் |
1051 |
|
|
(வி - ம்.) கடற்பரப்பு; இருபெயரொட்டு, வேற்றானை, கடற்றானை எனத் தனித்தனி கூட்டுக. பாய்மா : வினைத்தொகை; குதிரை. குஞ்சரம் - யானை, பாற்கடல் பாலையுடைய ஆனிரைக்குவமை.
|
( 302 ) |
1859 |
கண்ணகன் கடலங் கோடும் | |
|
பறைகளு முழங்கி விம்ம | |
|
விண்ணகத் தியங்கு மேகக் | |
|
குழாமென நிரைத்த வேழந் | |
|
திண்ணுகப் புரவித் திண்டோ் | |
|
விரைந்தன நிரந்த பாய்மா | |
|
மண்ணக மலிரக் காலாட் | |
|
கடல்கிளர்ந் தெழுந்த தன்றே. | |
|
(இ - ள்.) கண் அகன் கடல் அம் கோடும் பறைகளும் முழங்கி விம்ம - இடம் அகன்ற கடலிற் கிடைத்த அழகிய வளைகளும் பறைகளும் எழுந்தொலிக்க; விண் அகத்து இயங்கும் மேகக் குழாம் என நிரைத்த வேழம் - வானகத்திலே உலவும் முகிற் கூட்டம்போல ஒழுங்கான யானைகளும்; திண் நுகப்புரவித்திண் தேர் - திண்ணிய நுகமுடைய குதிரை பூட்டிய திண்ணிய தேர்களும்; விரைந்தன நிரந்த பாய்மா - விரைந்து செல்வனவாகிய பரவிய குதிரைகளும்; மண்ணகம் மலிரக் காலாள் கடல் - நிலப்பரப்பு நிறையக் காலாளாகிய கடல்; கிளர்ந்து எழுந்தது - (ஆகிய) படை பொங்கி எழுந்தது.
|
(வி - ம்.) இனி 'வேழமுந் தேரும் விரைந்தன; மாப் பரந்தன காலாட்கடல் மிக்கு எழுந்தது' என்த் தனித்தனியே முடிப்பினும் ஆம்.
|
( 303 ) |
1860 |
பானிறக் கவரி நெற்றிப் | |
|
பசுங்கிளி நிறத்த பாய்மாத் | |
|
தானுறப் பண்ணித் திண்டோ்த் | |
|
தம்பிகோல் கொள்ள வேறிக் | |
|
கூனிறக் குழவித் திங்கட் | |
|
குளிர்கதி ரார மார்பிற் | |
|
றேனிறங் கொண்ட கண்ணிச் | |
|
சீவக குமரன் சொன்னான். | |
|
(இ - ள்.) பால்நிறக் கவரி நெற்றிப் பசுங்கிளி நிறத்த பாய் மா - பால்போலும் நிறமுடைய கவரிகொண்ட நெற்றியும் பச்சைக் கிளிபோலும் நிறமும் உடைய குதிரைகளை; திண்தேர்த்தான் உறப்பண்ணி - திண்ணிய தேரிலே பொருந்தும்படி பண்ணி; தம்பி கோல் கொள்ள ஏறி - நந்தட்டன் அதனைச்
|