கனகமாலையார் இலம்பகம் |
1054 |
|
|
1864 |
ஏந்தலைத் தோழ ரெல்லா | |
|
மிணையடி தொழுது வீழச் | |
|
சேந்தன கண்ணி னாலுந் | |
|
திண்ணெழிற் றோளி னாலும் | |
|
வாய்ந்தவின் சொல்லி னாலு | |
|
மாலைதாழ் முடியி னாலு | |
|
மாய்ந்தவன் சிறப்புச் செய்தா | |
|
னவலநோ யவருந் தீர்ந்தார். | |
|
(இ - ள்.) ஏந்தலைத் தோழர் எல்லாம் இணையடி தொழுது வீழ - சீவகனை அவன் தோழரெலாரும் (அரசனென்றறிந்தமையின்) இரண்டடிகளிலும் வணங்கி வீழ; சேந்தன கண்ணிணாலும் - சிவந்தனவாகிய கண்களாலும்; திண் எழில் தோளினாலும் - திண்ணிய அழகிய தோளினாலும்; வாய்ந்த இன் சொல்லினாலும் - பொருந்திய இனிய மொழியினாலும்; மாலைதாழ் முடியினாலும் - மாலை தாங்கிய முடியாலும்; அவன் ஆய்ந்து சிறப்புச் செய்தான் - சீவகன் ஆராய்ந்து சிறப்புச் செய்தான்; அவரும் அவல நோய் தீர்ந்தார் - அவர்களும் துன்ப நோய் தீர்ந்தனர்.
|
(வி - ம்.) ஏந்தல் - சீவகன். வரிசையறிந்து கண்ணாலும் தோளாலும் இன்சொல்லினாலும் முடியினாலும் சிறப்புச்செய்தான் என்பது கருத்து.
|
( 308 ) |
1865 |
கழலவாய்க் கிடந்த நோன்றாட் | |
|
காளைதன் காத லாரை | |
|
நிழலவா யிறைஞ்சி நீங்கா | |
|
நெடுங்களிற் றெருத்த மேற்றி | |
|
யழலவாய்க் கிடந்த வைவே | |
|
லரசிளங் குமரர் சூழ்க் | |
|
குழலவாய்க் கிடந்த கோதை | |
|
தாதையூர் கொண்டு புக்கான். | |
|
(இ - ள்.) கழல் அவாய்க் கிடந்த நோன்தாள் காளை - கழல் அவாவித் தங்கிய வலிய தாளையுடைய சீவகன்; தன் காதலரை - தன் தோழரை; நிழல் அவாய் இறைஞ்சி நீங்கா நெடுங்களிற்று எருத்தம் ஏற்றி - தன் நிழலைப் பகை என்று அவாவித் தாழ்ந்து நீங்காத பெரிய களிற்றின் பிடரிலே ஏற்றி; அழல் அவாய்க் கிடந்த வைவேல் அரசிளங்குமரர் சூழ - கொல்லுலையை விரும்பிக்கிடந்த கூரிய வேலேந்திய அரசன் மக்கள் சூழ; குழல் அவாய்க் கிடந்த கோதை தாதையூர் கொண்டு புக்கான் - கூந்தலை அவாவிப்
|