பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1055 

பொருந்திய மனையாளின் தந்தையின் நகரிலே கொண்டு சென்றான்.

   (வி - ம்.) கழல் அவாய்க் கிடந்த தாள் என்க. காளை - சீவகன். காதலார் - தோழர். தன்னிழலைப் பகை என்று அவாவித் தாழ்ந்து நீங்காக் களிறு என்க. அழல் - கொல்லுலையிற்றீ. ”கொற்றுறைக் குற்றில” என்றார் பிறரும் (புறநா. 95) வங்கியம் விரும்பிக்கிடத்தற்குக் காரணமான இன்சொல்லையுடைய கோதை எனினுமாம்.

( 309 )

வேறு

1866 வானக்கி நின்று நுடங்குங்கொடி மாட மூதூர்ப்
பானக்க தீஞ்சொற் பவளம்புரை பாவை யன்ன
மானக்க நோக்கின் மாடவார்தொழ மைந்த ரேத்த
யானைக்கு ழாத்தி னிழிந்தாரரி மானொ டொப்பார்.
 

   (இ - ள்.) வான் நக்கி நின்று நுடங்கும் கொடி - வானைப் பொருந்தி நின்று அசையுங் கொடிகளையுடைய; மாட மூதூர் - மாடங்கள் நிறைந்த முதுநகரிலே; பால் நக்க தீசொல் - பால் போன்ற மொழியினையும்; மான் நக்க நோக்கின் - மானைப்போன்ற பார்வையினையும்; பவளம் புரை பாவை அன்ன மடவார் தொழ - பவளம் போன்ற நிறமுடைய பாவைகளைப் போன்ற மங்கையர் வணங்க; மைந்தர் ஏத்த - மைந்தர்கள் போற்ற; அரிமானொடு ஒப்பார் - சிங்கத்துடன் ஒப்பாராகிய அவர்கள்; யானைக் குழாத்தின் இழிந்தார் - யானைத் திரளினின்றும் இறங்கினர்.

   (வி - ம்.) சீவகனும் அரசிளங் குமரரும் தோழர் நால்வரும் யானையினின்றும் இழிகின்ற காலத்துச் சீவகனையும் அரசிளங்குமரரையும் மகளிர் தொழுதாரென்றுணர்க.

( 310 )
1867 செம்பொற் புளகத் திளஞாயிறு செற்ற கோயில்
வம்பிற் றுளும்பு முலைவாணெடுங் கண்மா டவார்
நம்பப் புகுந்து நரதேவ னருளி னெய்திப்
பைம்பொற் புறகக் களற்றானடி தாம்ப ணிந்தார்.
 

   (இ - ள்.) செம்பொன் புளகத்து இளஞாயிறு செற்ற கோயில் - செம்பொன்னாற் செய்த கண்ணாடியால் இளஞாயிற்றைக் கெடுத்த கோயிலிலே; வம்பின் துளும்பும் முர்லை வாள் நெடுங்கண் மடவார் நம்பப் புகுந்து - கச்சுடன் மாறுபட்டசையும் முலையினையும் வாளனைய நீண்ட கண்களையும் உடைய மாதர் விரும்பப் புகுந்து; நரதேவன் அருளின் எய்தி - மன்னன்அழைக்கச் சென்றணுகி; பைம் பொன் புளகக் களிற்றான் அடி