கனகமாலையார் இலம்பகம் |
1056 |
|
|
தாம் பணிந்தார் - பசிய பொன்னாலாகிய கண்ணாடி அமைத்த பருமத்தையுடைய களிற்றையுடைய அவ்வரசன் அடியிலே அவர்கள் பணிந்தனர்.
|
(வி - ம்.) செம்பொன்னாலாகிய புளகம் என்க. புளம் - கண்ணாடி, கண்ணாடி ஒளியால் இளஞாயிறு மழுங்கிற்று என்பது கருத்து. வம்பு - கச்சு, நம்ப - விரும்ப, ”நம்பும்மேவும் நசையா கும்மே” என்பது தொல்காப்பியம் (உரி. 31) - நரதேவன் அரசன்; தடமித்தன்.
|
( 311 ) |
1868 |
வல்லான் புனைந்த வயிரக்குழை வார்ந்து வான்பொற் | |
|
பல்பூ ணெருத்திற் பரந்தஞ்சுடர் கால மன்னன் | |
|
மல்லார் திரடோண் மருமான்முக நோக்க மைந்த | |
|
ரெல்லா மடிக ளெனக்கின்னுயிர்த் தோழ ரென்றான். | |
|
(இ - ள்.) மன்னன் - தடமித்த அரசன்; வார்ந்து வான் பொன் பல் பூண் எருத்தில் - வாரப்பட்டுத் தூயதாகிய பொன்னாற் செய்த பல பூண்களையுடைய எருத்திலே; வல்லான் புனைந்த வயிரக்குழை - வல்லவன் செய்த வயிரக்குழை; பரந்து அம் சுடர் கால - பரவிய அழகிய ஒளியை உமிழ; மல்ஆர் திரள் தோள் மருமான் முகம் நோக்க - மற்றொழில் நிறைந்த திரண்ட தோளையுடைய மருமகனுடைய முகத்தைப் பார்க்க; அடிகள் - அடிகளே!; மைந்தர் எல்லாம் எனக்கு இன் உயிர்த் தோழர் என்றான் - இவர்களெல்லோரும் எனக்கு இனிய உயிர்த் தோழர் என்றான்.
|
(வி - ம்.) மருமான் முகத்தை இவர் யார் என்னுங் குறிப்புடன் நோக்கினான்.
|
வல்லான் - கைத்தொழிலின் வல்லவன். எருத்து - பிடர். அஞ்சுடர் - அழகிய ஒளி. மல் - மற்றொழில். மருமான் - ஈண்டுச் சீவகன். அடிகள் - விளி. இம்மைந்தரெல்லாம் என்க.
|
( 312 ) |
1869 |
வார்பொன் முடிமேல் வயிரம்முழச் | |
|
சேந்த செல்வத் | |
|
தார்பொன் னடிசூழ் மணியங்கழ | |
|
லானை வேந்தன் | |
|
கார்மின் னுடங்கு மிடைமங்கையைக் | |
|
காண்க சென்றென் | |
|
றோ்மின்னு தாரா னருளத்தொழு | |
|
தேகி னாரே. | |
|
(இ - ள்.) வார் பொன் முடிமேல் வயிரம் உழச் சேந்த - (அரசர்களுடைய) நீண்ட பொன் முடிமேல் உள்ள வயிரம்
|