கனகமாலையார் இலம்பகம் |
1057 |
|
|
உழுதலாலே சிவந்த; செல்வத்து அடி ஆர்பொன் மணி அம் கழல்சூழ் - செல்வத்தையுடைய அடியைப் பொன்னிடத்திலே நிறைந்த மணியை உடைய கழல் சூழ்ந்த; ஆனை ஏர் மின்னுதாரான் வேந்தன் - யானையையுடைய அழகு பொருந்திய மாலையணிந்த, அரசன்; கார் மின் நுடங்கும் இடை மங்கையைச் சென்று காண்க என்று அருள் - காரிடை மின்போல அசையும் இடையையுடைய மங்கையைச் சென்று காண்க என்று அருள் செய்ய; தொழுது ஏகினார் - அவரும் வணங்கிகச சென்றனர்.
|
(வி - ம்.) வார்தல் - பெருகுதலுமாம்; ஆர்பொன் - திருவுமாம்.
|
முடிமேற் பதித்த வயிரமணி என்க. சேந்த - சிவந்த. கழல் வேந்தன், ஆனைவேந்தன் எனத் தனித்தனி கூட்டுக. காரிடத்து மின் போல் நுடங்கும் இடை என்க. மங்கை; கனகமாலை அவரும் ஏகினார் என்க.
|
( 313 ) |
1870 |
தழுமுற்றும் வாராத் திரடாமங்க | |
|
டாழ்ந்த கோயின் | |
|
முழுமுற்றுந் தானே விளக்காய்மிணிக் | |
|
கொம்பி னின்றா | |
|
ளெழுமுற்றுந் தோளார் தொழுதாரின்ன | |
|
ரென்று நோக்கக் | |
|
கழுமிற்றுக் காதல் கதிர்வெள்வளைத் | |
|
தோளி னாட்கே. | |
|
(இ - ள்.) தழு முற்றும் வாரத் திரள் தாமங்கள் தாழ்ந்த கோயில் - தழுவுவதற்கு முற்றும் வாராத திரண்ட தாமங்கள் தாழ்ந்த கோயிலின்; முழு முற்றும் தானே விளக்காய் மணிக் கொம்பின் நின்றாள் - முழுதுந்தானே விளக்கமாய்ச் சென்று மணிக்கொம்புபோல் நின்றவளை; எழுமுற்றும் தோளார் தொழுதார் - எழுவனைய தோளையுடையார் வணங்கினார்; இன்னர் என்று நோக்க - (அப்போது) இத் தன்மையர் என்று குறிப்புறச் சீவகன் கனகமாலையை நோக்கின அளவிலே; கதிர் வெள்வளைத் தோளினாட்குக் காதல் கழுமிற்று - ஒளி பொருந்திய வெள்ளிய வளையணிந்த தோளினாட்கு அன்பு நிறைந்தது.
|
(வி - ம்.) 'முழுமுற்றும்' என்பதை 'முழுதும் முற்றும்' என்பதன் விகாரம் என்றும், முற்றும் என்பதை மணிக் கொம்புடன் சேர்த்தும் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். மற்றும், ”முழுமுற்றும்' ஒரு சொல்லாக்கியும் உரைப்ப” என்றுங் கூறுவர்”. வாளாண்மையும் தாளாண்மையும் வேளாண்மையுமாகிய ஆடவர் அணிசேர் தோள் எழுவினை யொத்து விளங்குவதாகும். எழு - உருக்கு.
|
( 314 ) |