கனகமாலையார் இலம்பகம் |
1058 |
|
|
1871 |
துறக்கம் மிதுவே யெனுந்தொன்னகர் | |
|
மன்னன் மங்கை | |
|
தொறுக்கொண்ட கள்வ ரிவரோவெனச் | |
|
சொல்லி நக்காங் | |
|
கொறுக்கப் படுவா ரிவரென்றங் | |
|
கசதி யாடி | |
|
வெறுக்கைக் கிழவன் மகளென்ன | |
|
விருந்து செய்தாள். | |
|
(இ - ள்.) துறக்கம் இதுவே என்னும் தொல் நகர் மன்னன் மங்கை - வானுலகம் இதுவே எனத் தகும் பழம்பதியின் மன்னன் மகள்; தொறுக் கொண்ட கள்வர் இவரோ எனச் சொல்லி நக்கு - ஆனிரை கொண்ட திருடர் இவரோ என்றுரைத்து நகைத்து; இவர் ஒறுக்கப்படுவார் என்று அசதி ஆடி - இனி இவர் தண்டஞ் செய்யத் தகுவர் என்று நகையாடி; அங்கு வெறுக்கைக் கிழவன் மகள் என்ன விருந்து செய்தாள் - அப் போது இருநிதிக் கிழவன் மகளென்னும்படி விருந்து செய்வித்தாள்.
|
(வி - ம்.) துறக்கம் - தேவருலகம், மன்னன் மங்கை; கனகமாலை, தொறு - ஆனிரை, ஆனிரை கொண்ட கள்வராதலான் இவர் தண்டிக்கப்படுவர் என்றவாறு. அசதியாடுதல் - பரிகசித்து நகுதல். வெறுக்கைக் கிழவன்; குபேரன். வெறுக்கைக்கிழவன், மகள் செய்யும் விருந்து போன்று சிறந்த விருந்து செய்தாள் என்றவாறு.
|
( 315 ) |
1872 |
அருந்தீத் தொழிலே புரிந்தான்மறை யாய வெல்லாம் | |
|
விருந்தா விரிப்பா னவன்சீவக சாமி வேறா | |
|
விருந்தாற்கொ ரோலை கொடுத்தானெரி குண்ட லத்தாற் | |
|
பொருந்தார் பொறியைப் புறநீக்குபு நோக்கு கின்றான். | |
|
(இ - ள்.) அருந் தீத்தொழிலே புரிந்தான் - அரிய வேள்வி யியற்றும் மரபினனான் புத்திசேனன்; மறை ஆய எல்லாம் விருந்து ஆவிரிப்பான் - மறைந்த காரியங்கள் எல்லாம் புதிதாக் கூறவேண்டி; அவன் சீவகசாமி வேறா இருந்தாற்கு - (வந்த) அவன் சீவகசாமி தனியே இருந்தவனுக்கு ஓர் ஓலை கொடுத்தான் - ஒரு திருமுகத்தைக் கொடுத்தான் : எரி குண்டலத்தால் பொருந்து ஆர் பொறியைப் புறம் நீக்குபு நோக்குகின்றான். ஒளிவிடும் குண்டலத்தால் பொருந்துதல் நிறைந்த குழையைப் புறத்தினின்றும் நீக்கி வாசிக்கின்றான்.
|
(வி - ம்.) பொறி, தத்தம் பொருள் வயின் தம்மொடு சிவணிய ஆகுபெயரிலேயாய்க் குழையை உணர்த்திற்று.
|