பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1059 

   அருந் தீத்தொழில் - செய்தற்கரிய வேள்விச் செயல். விருந்தாக எனற்பாலாது ஈறுகெட்டது. விரிப்பான் : வினையெச்சம். அவன் : புத்தி சேனன். வேறா - வேறாக. பொருந்து ஆர் எனக் கண்ணழித்துக் கொள்க. பொறி - இலச்சினை.

( 316 )

வேறு

1873 மற்றடிகள் கண்டருளிச் செய்க மலரடிக்கீழ்ச்
சிற்றடிச்சி தத்தையடி வீழ்ச்சி திருவடிகட்
குற்றடிசின் மஞ்சனத்தை யுள்ளுறுத்த காப்பும்
பொற்புடைய வாகவெனப் போற்றி யடிவீழ்ந்தேன்.

   (இ - ள்.) சிற்றடிச்சி தத்தை அடி வீழ்ச்சி - சிற்றடிச்சியான தத்தை அடியிலே வீழ்ந்திருப்பதை; அடிகள் மலரடிக் கீழ்க் கண்டருளிச் செய்க - அடிகள் தம் மலரடியிலே பார்த்தருளிச் செய்க; திருவடிகட்கு உற்ற அடிசில் மஞ்சனத்தை உள்ளுறுத்த காப்பும் - திருவடிகளுக்குப் பொருந்திய அடிசிலையும் மஞ்சனத்தையும் உள்ளிட்டனவும் பிற காப்புக்களும் ; பொற்பு உடையவாக எனப் போற்றி அடி வீழ்ந்தேன் - தகுதி யுடையனவாக என்று வாழ்த்தி அடியிலே வீழ்ந்தேன்.

   (வி - ம்.) மற்று; அசை . நச்சினார்க்கினியர் இச் செய்யுளிற் கொண்டு கூட்டி உரைக்கும் முடிபும் பொருளும்:-

   மற்றுக் காப்பென்க; அரசன் நுகருவனவற்றைக் காப்பென்றல் மரபு. அடியிலே உற்றுப் போற்றியென்க. என்றது சமைக்கின்ற பொழுது உற்றுக் காக்கப்பட்டு என்றவாறு.

   திருவடிகட்கு அடிசிலையும் மஞ்சனத்தையும் உள்ளிட்டனவும் மற்றுக் காப்புக்களும் அடியிலே உற்றுப் போற்றப்பட்டுப் பொற்புடையவாக வேண்டுமென்று சிற்றடியாளாகிய தத்தை மலரடிக் கீழ் வீழ்ந்தேன். அவ்வடி வீழ்ச்சியை அடிகள் நெஞ்சாலே கண்டருள்க என்றவாறு.

   இவை காத்தல் தனக்குக் கடனாதலின், முற்கூறினாள்.

( 317 )
1874 வயிரமணிக் கலன்கமழுங் கற்பகநன் மாலை
யுயிரைமதஞ் செய்யுமதுத் தண்டொடுடை யாடை
செயிரினறுஞ் சாந்துசிலை யம்புமணி யயில்வாண்
மயிரெலியின் போர்வையொடெம் மன்னன்விடுத்தானே.

   (இ - ள்.) வயிர மணிக்கலன் - வயிர மணிகளாகிய பூண்களும்; கற்பக நன்மாலை - அழகிய கற்பக மாலையும்; உயிரை மதஞ் செய்யும் மதுத் தண்டொடு - உயிருக்குக் களிப்பூட்டும் மதுத் தண்டும்; உடை - உடையும்; ஆடை - ஆடையும்; செயிர் இல் நறுஞ் சாந்து - குற்றமற்ற நல்ல சாந்தும்; சிலை - வில்லும்;