பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1064 

வேறு

1882 எங்கோமற் றென்றிறநீர் கேட்டதென்
  றாற்கெரி மணிப்பூட்
செங்கோன் மணிநெடுந்தோ்ச் செல்வன்
  காதற் பெருந்தேவி
தங்காத் தவவுரு வந்தாங்கித்
  தண்டா ரணியத்து
ளங்காத் திருந்தாளைத் தலைப்பட்
  டைய வறிந்தோமே.

   (இ - ள்.) என்திறம் நீர் கேட்டது எங்கோ என்றாற்கு - நீர் என் திறனைக் கேட்டது எங்கேயோ என்று வினவினாற்கு ; ஐய! - ஐயனே!; எரிமணிப்பூண் செங்கோல் மணிநெடுந்தேர்ச் செல்வன் - ஒளியுடைய மணிக்கலன்களும் செங்கோலும் மணி நெடுந்தேரும் உடைய சச்சந்த மன்னனின்; காதல் பெருந்தேவி - அன்புடைய பட்டத்தரசி விசயை ; தங்காத் தவ உருவம் தாங்கி - தனக்கேலாத தவ உருவத்தைச் சுமந்து; தண்டாரணியத்துள் - தண்டாரணியம் என்னும் வனத்திலே; அங்காத்து இருந்தாளை - மனத்தே நீ வாழ வேண்டுமென்ற ஆசை பிணிக்கப் பட்டுத் துறவோருறையும் அவ்விடத்தே இருந்தவளை; தலைப் பட்டு அறிந்தோம் - எதிர்ப்பட்டு அறிந்தோம்.

   (வி - ம்.) 'ஆத்த பொறிய '(நாலடி. 290) 'ஆத்த அறிவினர்' [நாலடி. 151] என்றாற்போல 'ஆத்து' என்றார். இனி 'உளங்காத்து' என்றும் பாடமோதுப.

   பொள்ளெனக் கூறின் அவன் துன்பம் எல்லையற்றதாம் என நின்தாய் என்னாது ஏதிலாட்டிபோலச் செல்வன் காதற் பெருந்தேவி என்றார். செல்வன் என்றது சச்சந்தனை. தண்டாரணியம் - தண்டகாரணியம்.

( 326 )
1883 என்னேமற் றென்னேநீர் மொழிந்ததென்
  னேயென விரும்பி
முன்னேமொ ழிந்தாற்போன் முறைநின்
  றெல்லா முடன்மொழிய
மன்னாஞ் சிந்துவபோன் மலர்ந்த
  செந்தா மரைக்கண்ணீர்
பொன்னார மார்பின்மேற் பொழியப்
  புன்க ணுற்றானே.

   (இ - ள்.) விரும்பி முற்று நீர் மொழிந்தது என்னே என்னே என்னே என - சீவகன் விரும்பி, 'இனி நீர் கூறியது என்னே!