| விமலையார் இலம்பகம் | 
1071  | 
 | 
  | 
| 
 உலகம் எல்லாம் தழுவினீர் - உலகம் முழுதும் கைக்கெண்டீராவீர்; தாமரை உறையும் செய்யாள் விழுவினார் தம்மைப் புல்லாள் - தாமரையில் வாழும் திருமகள் காவாது வழுவினவரைச் சேராள்; (ஆகையால், காவாது வழுவாதீர்); நும் கண்ணி வாழ்க! - நும் கண்ணி வாழ்வதாக. 
 | 
| 
    (வி - ம்.) மாது ஒ : அசைகள், 'நும் கண்ணி வாழ்க!' என்பதனைக் கழுவினீர் என்பதன்பின் சேர்ப்பர் நச்சினார்க்கினியர். 
 | 
| 
    சீவகன் தன் பிற்ப்புண்மையைப் பண்டே உணர்ந்திருந்தானாயினும் அவனும் இதுகாறும் மறைவாகவே அதனைப் போற்றி வந்தானாகலின், இப்போது நந்தட்டன் அனைவரும் உணர்ந்தமை கருதி விழுமணி மாசு மூழ்கிக்கிடந்தது இவ்வுலகம் விற்பக் கழுவினீர் என அவன்பிறப்பு வெளிப்பாட்டைத் தோழர் மேலதாக்கியே உரைக்கின்றான். சிக்க - அகப்பட. செய்யாள் - திருமகள். 
 | 
( 2 ) | 
| 1891 | 
தொழுததங் கையி னுள்ளுந் |   | 
  துறுமுடி யகத்துஞ் சோர |   | 
வழுதகண் ணீரி னுள்ளு |   | 
  மணிகலத் தகத்து மாய்ந்து |   | 
பழுதுகண் ணரிந்து கொல்லும் |   | 
  படையுட னெடுங்கும் பற்றா |   | 
தொழிகயார் கண்ணுந் தேற்றந் |   | 
  தெளிகுற்றார் விளிகுற் றாரே. |   | 
 
  | 
| 
    (இ - ள்.) தொழுத தம் கையினுள்ளும் - தொழுத தம் கையிலும்; துறுமுடி அகத்தும் - மயிர் நெருங்கிய முடியிலும்; சோர அழுத கண்ணீரின் உள்ளும் - ஒழுக அழுத கண்ணீரிலும்; அணிகலத்தகத்தும் - அணிகலன்களிலும்; கொல்லும் படை உடன் ஒடுங்கும் - கொல்கின்ற படை சேர ஒடுங்கும்; ஆய்ந்து - அதனை ஆராய்ந்து; பழுது கண்ணரிந்து - அக் கூடா நட்பைத் தம்மிடமிருந்து நீக்கி; யார்கண்ணும் தேற்றம் பற்றாது ஒழிக - யாவரிடத்தும் தெளிதலைப் பற்றாது விடுக; தெளிகுற்றார் விளி குற்றாரே - அன்றித் தெளிதல் கொண்டவர் இறந்தோரே யாவர். 
 | 
| 
    (வி - ம்.) அரசர்க்கு ஒரு துன்பம் வந்தவிடத்துப் பகைவர் நட்புடையார்போல் அழுக்கண்ணீரும் கொலைசூழ்தலின் கண்ணீரிலும் படையொடுங்கிற்றாம். 'ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்து' (குறள்-828) என்றார் தேவரும். 
 | 
( 3 ) | 
|  1892 | 
தோய்தகை மகளிர்த் தோயின் |   | 
  மெய்யணி நீக்கித் தூய்நீ |   | 
ராய்முது மகளிர் தம்மா |   | 
  லரிறபத் திமிரி யாட்டி |   | 
 
 
 |