விமலையார் இலம்பகம் |
1075 |
|
|
”உடையும் அடிசிலுடம் உருமண்ணு வாவிற்குக் |
|
கடனா வைத்தலிற் கைபுனைந் தியற்றி |
|
அகன்மடி யவன்றான் அமர்ந்து கொடுப்ப” |
|
என்றார் கதையினும் (3 - 9 : 128 - 30.)
|
( 8 ) |
வேறு
|
1897 |
சிறுகண்யா னையினினஞ் சோ்ந்துசே வகங்கொளத் | |
துறுகலென் றுணர்கலாத் துள்ளிமந் திம்மக | |
நறியசந் தின்றுணி நாறவெந் தனகள்கொண் | |
டெறியவெள் கிம்மயிர்க் கவரிமா விரியுமே. | |
|
(இ - ள்.) சிறுகண் யானையின் இனம் சேர்ந்து சேவகம் கொள - சிறிய கண்களையுடைய யானைத்திரள் கூடித் துயில் கோடலின்; மந்திமக உணர்கலா துறுகல் என்று துள்ளி - குரங்கின் குட்டிகள் யானையென்றுணராமல் பெரிய கல் என்று நினைத்து மேலே துள்ளி; நறிய சந்தின் துணி வெந்தனகள் கொண்டு நாற எறிய - நல்ல சந்தனக் கட்டைகள் வெந்தனவற்றைக் கொண்டு மணம் வீசுமாறு ஒன்றையொன்று எறிய; மயிர்க் கவரி மாஎள்கி இரியும் - மயிரையுடைய கவரிமா துணுக்கென அச்சுற்று ஓடும்.
|
(வி - ம்.) 'துள்ளும்' என்பது பாடமாயின், 'துள்ளும் மகவு' என்க.
|
சேவகம் : ஆகுபெயர். துறுகல் - குண்டுக்கல். மந்திமக துறுகல் என்றுணர்கலா துள்ளி என மாறுக. மக - குட்டி. சந்தின் துணி - சந்தனக்குறடு. வெந்தனகள் என்புழிக் கள் விகுதிமேல் விகுதி. 'மந்திம்மக, வெள்கிம் மயிர்' என்பவற்றுள் மகரவொற்று வண்ணநோக்கி விரிந்தது.
|
( 9 ) |
1898 |
புகழ்வரைச் சென்னிமேற் பூசையிற் பெரியன | |
பவழமே யனையன பன்மயிர்ப் பேரெலி | |
யகழுமிங் குலிகமஞ் சனவரைச் சொரிவன | |
கவழயா னையினுதற் றவழுங்கச் சொத்தவே. | |
|
(இ - ள்.) பவழமே அனையன பன்மயிர்ப் பேரெலி - பவழமே போன்றனவாகிய மிகுதியான மயிரையுடைய பேரெலிகள்; புகழ்வரைச் சென்னிமேல் - புகழப்படுகின்ற மலையுச்சியின் கண் வாழும்; பூசையின் பெரியன - பூனையினும் பெரியவனாய்; அகழும் இங்குலிகம் - அகழும் சாதிலிங்கம்; அஞ்சனவரை சொரிவன - அஞ்சன வரையின் தாழ்வரையிலே வீழ்கின்றவை; கவழ யானையின் நுதல் தவழும் கச்சு ஒத்த - கவள முண்ணும் - யானையின் நெற்றியிலே தவழும் பட்டுக் கச்சைப் போன்றன.
|