பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1077 

1901 சாரலந் திமிசிடைச் சந்தனத் தழைவயி
னீரதீம் பூமரம் நிரந்ததக் கோலமு
மேரில வங்கமும் மின்கருப் பூரமும்
மோருநா விகலந் தோசனை கமழுமே.

   (இ - ள்.) அம் திமிசு சாரலிடைச் சந்தனத் தழை வயின் - அழகிய திமிசு சூழ்ந்த சந்தன மரத்தில் தழைக்கு நடுவே; நீர தீம்பூ மரம் - நீர்மையை யுடைய தீம்பூ மரமும்; நிரந்த தக்கோலமும் - நிரவலாக இருந்த தக்கோல மரமும்; ஏர் இலவங்கமும் - அழகிய இலவங்க மரமும்; இன் கருப்பூரமும் - இனிய கருப்பூரமும்; நாவி கலந்த ஓசனை கமழும் - புழுகுடன் கலந்து நாற்காத எல்லை கமழும்.

   (வி - ம்.) திமிசு, தீம்பூ : மரவகைகள். ஓரும் : அசை.

( 13 )
1902 மைந்தரைப் பார்ப்பன மாமகண் மாக்குழாஞ்
சந்தன மேய்வன தவழ்மதக் களிற்றின
மந்தழைக் காடெலாந் திளைப்பவா மானினஞ்
சிந்தவால் வெடிப்பன சிங்கமெங் கும்முள.

   (இ - ள்.) மைந்தரைப் பார்ப்பன மாமகள் மாக்குழாம் - மைந்தரைப் பார்ப்்பனவாகிய பெரிய மகண்மாக்களின் திரளும்; சந்தனம் மேய்வன தவழ் மதக் களிற்றினம் - சந்தனத் தழையை மேய்வனவாகிய மதம் தவழும் களிற்றின் திரளும்; அம் தழைக்காடு எலாம் திளைப்ப ஆமான்இனம் - அழகிய தழையை உடைய காடுகளில் எல்லாம் பயில்வனவாகிய ஆமானின் திரளும்; சிந்த - சிதறி ஓடும்படி; வால் வெடிப்பன சிங்கம் எங்கும் உள - வாலை வீசுவனவாகிய சிங்கங்கள் எங்கும் உள்ளன.

   (வி - ம்.) இனி, இவை நான்கும் எங்கும் உள எனினும் ஆம்.

   மகண்மா - ஒருவகை விலங்கு. தவழ்மதம் : வினைத்தொகை. அந்தழை - அழகிய தழை. ஆமானினம் - காட்டுப் பசுவின் கூட்டம். எங்கும்முள, மகரம் வண்ணநோக்கி விரிந்தது.

( 14 )
1903 வருக்கையின் கனிதொறும் வானரம் பாய்ந்துராய்ப்
பொருப்பெலாம் பொன்கிடந் தொழுகிமேற் றிருவில்வீழ்ந்
தொருக்குலாய் நிலமிசை மிளிர்வதொத் தொளிர்மணி
திருக்கிள ரொளிகுலாய் வானகஞ் செகுக்குமே.

   (இ - ள்.) வருக்கையின் கனி தொறும் வானரம் பாய்ந்து - பலாவின் கனி தொறும் வானரங்கள் பாய்தலால்; பொருப்பெலாம் உராய் ஒழுகி - மலையெங்கும் பரவி ஒழுகி; பொன்