விமலையார் இலம்பகம் |
1079 |
|
|
வேறு
|
1906 |
பூத்தகி றவழும் போர்வை | |
பூசுசாந் தாற்றி பொன்னூற் | |
கோத்துநீர் பிலிற்றுங் காந்தங் | |
குங்கும வைரப் பொற்கோய் | |
சாத்துறி பவழக் கன்னல் | |
சந்தன வால வட்ட | |
நீத்தவ ரிடத்து நாற்றி | |
நிழன்மணி யுலகஞ் செய்தார். | |
|
(இ - ள்.) பூத்து அகில் தவபம் போர்வை - பொலிவு பெற்று அகிற்புகை தவழும் போர்வையையும்; பூசு சாந்து ஆற்றி - மேலே பூசிய சந்தனத்தை ஆற்றும் சிற்றால வட்டத்தையும்; பொன் நூல் - தலையிற் கட்டும் பொன்னூலையும்; நீர் கோத்துப் பிலிற்றும் காந்தம் - நீரை விடாமல் துளிக்கும் சந்திரகாந்தக் கல்லையும்; குங்கும வைரப் பொன்கோய் - குங்குமம் வைக்கும் வைர மிழைத்த பொற்சிமிழையும்; சாத்துறி - பரணிக் கூட்டையும்; பவழக் கன்னல் - பவழக் கரகத்தையும்; சந்தன ஆல வட்டம் - சந்தன மரத்தாற் செய்த பேரால வட்டத்தையும்; நீத்தவர் இடத்து நாற்றி - தாபதரின் பள்ளியிலே தூக்கி; நிழல் மணி உலகம் செய்தார் - ஒளியையுடைய அழகிய வானுல காக்கினர்.
|
(வி - ம்.) அகில் : ஆகுபெயர். பூத்தல் - பொலிவுறுதல். சாந்தாற்றி -சிற்றாலவட்டம். நீர் பிலிற்றும் - நீரைக் காலும். காந்தம் - சந்திரகாந்தம். கோய் - சிமிழ். சாத்துறி - பரணிக்கூடு. கன்னல் - கரகம். நீத்தவர் - தாபதர்.
|
( 18 ) |
1907 |
நித்தில முலையி னார்த நெடுங்கணா னோக்கப் பெற்றுங் | |
கைத்தலந் தீண்டப் பெற்றுங் கனிந்தன மலர்ந்த காண்க | |
வைத்தலர் கொய்யத் தாழ்ந்த மரமுயி ரில்லை யென்பார் | |
பித்தல ராயிற் பேய்க ளென்றவாற் பேச லாமோ. | |
|
(இ - ள்.) நித்தில முலையினர்தம் நெடுங்கணால் நோக்கப் பெற்றும் - முத்தணிந்த முலையினருடைய பெருங்கண்களாற் பார்க்கப் பெற்றும் : கைத்தலம் தீண்டப் பெற்றும் - கைகளால் தொடுதல் பெற்றும்; கனிந்தன - கனியாதன கனிந்தன; மலர்ந்த - பூவாதன பூத்தன; காண்க - அவற்றைக் காண்பீராக!; வைத்து அலர் கொய்யத் தாழ்ந்த மரம் உயிர் இல்லை யென்பார் - மங்கையர் கையை வைத்து மலர் கொய்தற்கேற்ற அளவிலே தாழ்ந்து கொடுப்பதுஞ் செய்தனவாகிய மரங்கட்கு உயிர் இல்லை
|