பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 108 

அரும் பாவை போன்று உறையும் - உவமையற்ற பாவைபோலத் தங்கினாள்.

 

   (வி - ம்.) கப்புரம் : பாகதம் [கருப்பூரம் என்னும் வடமொழிச் சிதைவு.] காமவல்லியும்: உம்: உயர்வு சிறப்பு. வேறு கருத்துச் செல்லாமல் தன்னையே கருதுவித்தலின் 'பாவை' என்றார்.

 

   இதற்கு முன்பு உலகியல் மணங் கூறிக், காமமிகுதியாற் கெடுகின்றமை மேற்கூறுகின்றார்.

 

   பசுந்திரை - பசிய வெற்றிலைச் சுருள். சுருட்டப்படுதலால் (திரைக்கப்படுதலால்) திரை என்பது அதற்குப் பெயராயிற்று. சிலதியர்- பணி மகளிர். தீவிய- இனிய. துப்பு - நுகர்வன. கற்பக மரத்தே படர்தற்கு அலமருகின்ற காமவல்லி போல்வாள் என்பது கருத்து. பாவை - கொல்லிப்பாவை. இது தன்னைக் கண்டாரை அப்பாற் போகவிடாமல் கவர்ந்து மயக்குதல்பற்றி உவமையாக எடுத்தார் என்பார். நச்சினார்க்கினியர் 'வேறு கருத்துட் செல்லாமல் தன்னையே கருதுவித்தலின் பாவை யென்றார்' என்றார்.

( 168 )
198 மண்ணகங் காவலின் வழுக்கி மன்னவன்
பெண்ணருங் கலத்தொடு பிணைந்த பேரருள்
விண்ணக மிருள்கொள விளங்கு வெண்மதி
யொண்ணிற வுரோணியோ டொளித்த தொத்ததே.

   (இ - ள்.) மன்னவன் மண்ணகம் (இருள்கொளக்) காவலின் வழுக்கி- சச்சந்தன் நிலவுலகம் இருளுறக் காவலிற் பிழை செய்து ; பெண் அருங்கலத்தொடு பிணைந்த பேரருள் - பெண்களுக்கு அருங்கலமானவளுடன் கூடிய அளவிறந்த கண்ணோட்டம்; விளங்கு வெண்மதி விண்ணகம் இருள்கொள - விளக்கமான திங்கள் வானகம் இருளடைய; ஒண்ணிற உரோணியோடு ஒளித்தது ஒத்தது - ஒளிமிகும் உரோகிணியுடன் மறைந்தது போன்றது.

 

   (வி - ம்.) காவலின் : இன் : [ஐந்தனுருபு] நீக்கப்பொருட்டு. உரோணி : உரோகிணி : விகாரம் . அவ்வுரோகிணி காரணத்தின் இருடி சபிக்க மதிதேய்ந்ததொரு கதை.

 

   பேரருள் என்றது அளவிறந்தத கண்ணோட்டத்தை.

 

   உவமைக்குக் கூறிய இருள்கொள என்பதை மண்ணகம் இருள் கொள என்றும் உவமைக்குங் கூட்டுக.

( 169 )

வேறு

 
199 குங்குமத் தோளி னானுங கொழுங்கயற் கண்ணி னாளுந்
தங்கிய காதல் வெள்ளந் தணப்பறப் பருகு நாளுட்
டிங்கள்வெண் குடையி னாற்குத் திருவிழுக் குற்ற வண்ணம்
பைங்கதிர் மதியிற் றெள்ளிப் பகர்ந்தெடுத் துரைத்து மன்றே.