பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1080 

என்றுரைப்பவர்; பித்து அலராயின் - பித்தர் அல்லராயின்; பேய்கள் என்று அலால் - பேய்கள் என்று கூறுதலையன்றி; பேசலாமோ - வேறே கூறத்தகுமோ? (என்று அவர்கள் தம்முள் உரைத்துக் கொண்டனர்).

   (வி - ம்.) மகளிர் நோக்குதலானும் தீண்டுதலானும் சில மரங்கள் கனிதலும் மலர்தலும் உடையவாம் என்பதொரு வழக்கு. ”உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்.” என்பதுபற்றிப் 'பேய்கள் என்று அலாற் பேசலாமோ' என்றார். மரம் உயிரில்லை என்பார் அலகையா வைக்கப்படுவர் என்றவாறு.

( 19 )
1908 பொறிமயி லிழியும் பொற்றார்
  முருகனிற் பொலிந்து மாவி
னெறிமையி னிழிந்து மைந்தன்
  மணிக்கைமத் திகையை நீக்கி
வெறுமையி னவரைப் போக்கி
  வெள்ளிடைப் படாத நீரா
லறிமயி லகவுங் கோயி
  லடிகளைச் செவ்வி யென்றான்.

   (இ - ள்.) மைந்தன் - சீவகன்; பொறிமயில் இழியும் பொன்தார் முருகனின் பொலிந்து - புள்ளிகளையுடைய மயிலினின்றிறங்கும் பொன்மாலை அணிந்த முருகனைப் போலப் பொலிவுற்று; மாவின் நெறிமையின் இழிந்து - குதிரையிலிருந்து இறங்கும் முறையான் இறங்கி; கைமணி மத்திகையை நீக்கி - கையிலிருந்து மணிகள் இழைத்த குதிரைச் சம்மட்டியை நீக்கி; வெறுமையினவரைப் போக்கி வெள்ளிடைப் படாத நீரால் - அறிவிலாதாரைப் போகவிடுத்து, அடிகளை வெளியிடும் வகை நேராதவாறு; மயில் அகவும் கோயில் அடிகளைச் செவ்வி அறி என்றான் - மயில் அகவும் தவப் பள்ளியிலே சென்று அடிகளைச் செவ்வியறிவாயாக என்றான்.

   (வி - ம்.) அன்பு செலுத்தலின் அவனோடே கூடச் செல்கின்றவன் செவ்வி அறிந்தே சேறல் முறையாகலானும், பதுமுகன் தன்னை அறிவிக்க விசயை அறிய வேண்டுதலானும் செவ்வியறி என்றான்.

( 20 )
1909 எல்லிருட் கனவிற் கண்டேன் கண்ணிட னாடு மின்னே
பல்லியும் பட்ட பாங்கர் வருங்கொலோ நம்பி யென்று
சொல்லின டேவி நிற்பப் பதுமுகன் றொழுது சோ்ந்து
நல்லடி பணிந்து நம்பி வந்தன னடிக ளென்றான்.

   (இ - ள்.) எல்இருள் கனவில் கண்டேன் - விடியற்காலத் திருளிலே கனவிலே கண்டேன்; கண்இடன் ஆடும் இடக்