விமலையார் இலம்பகம் |
1082 |
|
|
1911 |
திருவடி தொழுது வீழ்ந்த | |
சிறுவனைக் கண்ட போழ்தே | |
வருபனி சுமந்து வாட்கண் | |
வனமுலை பொழிந்த தீம்பான் | |
முருகுடை மார்பிற் பாய்ந்து | |
முழுமெயு நனைப்ப மாதர் | |
வருகவென் களிறென் றேத்தி | |
வாங்குபு தழுவிக் கொண்டாள். | |
|
(இ - ள்.) திருவடி தொழுது வீழ்ந்த சிறுவனைக் கண்ட போழ்தே - அங்ஙனம் வீழ்ந்த சிறுவனைப் பார்த்தபோதே; வாள் கண் சுமந்து வருபனி - ஒளியுற்ற கண் சுமந்து பெருகிய நீரும்; வனமுலை பொழிந்த தீ பால் - அழகிய முலை பெய்த இனிய பாலும்; முருகுடை மார்பின் பாய்ந்து - சீவகனுடைய மார்பிலே பாய்ந்து; முழுமெயும் நனைப்ப - மெய்யெல்லாம் நனைக்கும்படி; மாதர் - விசயை; என் களிறு! வருக என்று ஏத்தி - என் களிறே! வருக! எனப் புகழ்ந்து; வாங்குபு தழுவிக்கொண்டாள் - தன் மார்பிலே அவன் மார்பு ஒடுங்கம்படி தழுவிக்கொண்டாள்.
|
(வி - ம்.) 'முருகுடை மார்பிற் பாய்ந்து - அவனுடைய மார்பிற் காட்டிலும் தன் மார்பு பாய்ந்து' என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். இதற்கு, 'வாட்கண் சுமந்த வருபனி வனமுலை பொழிந்த தீம்பால் முழுமெயும் நனைப்ப' எனக் கூட்டி, 'அவன் எழும்போது இவை அவன் மெய்ம் முழுதும் நனைப்ப' என்று பிரிப்பர்; ஈண்டுக் கூறிய பொருளையுங் கொள்வர்.
|
( 23 ) |
1912 |
காளையாம் பருவ மோராள் காதன்மீக் கூர்த லாலே | |
வாளையா நெடிய கண்ணான் மகனைமார் பொடுங்கப் புல்லித் | |
தாளையா முன்பு செய்த தவத்தது விளைவி லாதேன் | |
றோளையாத் தீர்ந்த தென்றா டொழுதகு தெய்வ மன்னாள். | |
|
(இ - ள்.) தொழுதகு தெய்வம் அன்னாள் - யாவரும் வணங்கும் தெய்வம் போன்ற; வாளை ஆம் நெடிய கண்ணாள் - வாளைப்போன்ற நீண்ட கண்ணாளாகிய விசயை; காளை ஆம் பருவம் ஓராள் - இது காளைப்பருவம், தழுவலாகாதென்று நினையாளாய்; காதல் மீக் கூர்தலாலே - காதல் மிகுந்து பரவுதலாலே; மகனை மார்பு ஒடுங்கப் புல்லி - சீவகனைத் தன் மார்பிலே குழவிப்பருவம்போல ஒடுங்குமாறு தழுவி; ஐயா! முன்பு தாள் செய்த தவத்தது விளைவு இலாதேன் - ஐயனே! முற்பிறப்பிலே முயற்சியாற் செய்த தவத்தின் பயன் இல்லாத என்னுடைய; தோள் அயாத் தீர்ந்தது என்றாள் - தோள் வருத்தம் நீங்கியது என்றாள்.
|