பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1083 

   (வி - ம்.) வாளை ஆம் நெடிய கண்ணாள் : சச்சந்தனைக் கோறலின் விசயைக்குப் பெயராயிற்றென்பர் நச்சினார்க்கினியர். இவ்வகைப் பொருள் நோக்கம் ஒன்றும் இன்றிப் பெயராக நின்ற தென்றே கொள்க.

( 24 )
1913 வாட்டிறற் குருசி றன்னை வாளம ரகத்து ணீத்துக்
காட்டகத் தும்மை நீத்த கயத்தியேற் காண வந்தீர்
சேட்டிளம் பருதி மார்பிற் சீவக சாமி யீரே
யூட்டரக் குண்ட செந்தா மரையடி நோவ வென்றாள்.

   (இ - ள்.) சேடு இளம் பருதி மார்பின் சீவக சாமியீரே! - பெருமையையுடைய இள ஞாயிறு போலும் மார்பினையுடைய சீவக சாமியீரே!; வாள் திறல் குருசில் தன்னை வாள் அமரகத்துள் நீத்து - வாள் வலி பெற்ற அரசனைப் போரிலே கைவிட்டு; உம்மைக் காட்டகத்து நீத்த - நும்மைச் சுடுகாட்டிலே கைவிட்ட; கயத்தியேற் காண - கொடியேனைக் காண; ஊட்டு அரக்கு உண்ட செந்தாமரை அடிநோவ - ஊட்டிய செந்நிறங்கொண்ட செந்தாமரை அனைய அடிகள் நோமாறு; வந்தீர் என்றாள் - வந்தீரே! நும் அன்பிருந்தவாறு என்னே! என்றாள்.

   (வி - ம்.) 'சீவக சாமியீரே' என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறும் முடிபு : 'பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே' (தொல் - விளிமரபு, 23) என்ற சூத்திரத்தில், சீவக சாமியென்னும் இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. தன்னினம் முடித்தல் என்பதனாற் சீவக சாமியார் என ஆரீறாய்ச் சீவக சாமியீரே என ஈரொடு ஏகாரம் பெறுதல கொள்க' எனக் கூறினார்.

( 25 )
1914 கெடலருங் குரைய கொற்றங்
  கெடப்பிறந் ததுவு மன்றி
நடலையு ளடிகள் வைக
  நட்புடை யவர்க ணைய
விடைமகன் கொன்ற வின்னா
  மரத்தினேன் றந்த துன்பக்
கடலகத் தழுந்த வேண்டா
  களைகவிக் கவலை யென்றான்.

   (இ - ள்.) கெடல் அருங் கொற்றம் கெடப் பிறந்ததுவும் அன்றி - கெடாத வெற்றியையுடைய அரசன் கெடுமாறு பிறந்ததுவும் அல்லாமல்; அடிகள் நடலையுள் வைக - அடிகள் வருத்தத்திலே தங்க; நட்புடையவர்கள் நைய - நண்பர்கள் வருந்த; இடைமகன் கொன்ற இன்னா மரத்தினேன் தந்த - இடையன் வெட்டிய துன்புறும் மரத்தின் தன்மையுடையேனாகிய யான் தந்த; துன்பக் கடலகத்து அழுந்த வேண்டா - துன்பக்கடலிலே