விமலையார் இலம்பகம் |
1084 |
|
|
அழுந்த வேண்டா; இக்கவலை களைக என்றான் - இனி இத்துன்பத்தைக் கைவிடுக என்றான்.
|
(வி - ம்.) குரைய : அசை. கொற்றம் - தொழிலாகுபெயராய் அரசனை உணர்த்தியது. நட்புடையவர் : சச்சந்தனுடைய நண்பர்கள்; சீவகன் தோழருடைய தந்தையர்.
|
'உயிருடன் இருந்தேனாய்ப் பகையை வென்றேனும் அல்லேன்; உயிரை நீத்தேனும் அல்லேன்' என்று கருதி, 'மரத்தினேன்' என்றான். 'இடையன் எறிந்த மரம்' (பழ. 314) என்றார் பிறரும்.
|
( 26 ) |
1915 |
யானல னௌவை யாவாள் | |
சுநந்தையே யையற் கென்றுங் | |
கோனலன் றந்தை கந்துக் | |
கடனெனக் குணத்தின் மிக்க | |
பானிலத் துறையுந் தீந்தே | |
னனையவா யமிர்த மூற | |
மானலங் கொண்ட நோக்கி | |
மகன்மன மகிழ்ச் சொன்னாள். | |
|
(இ - ள்.) ஐயற்கு ஒளவை யாவாள் சுநந்தையே, யான் அலன் - ஐயனுக்குத் தாயாவாள் சுநந்தையே, யானல்லேன்; தந்தை கந்துக் கடன், கோன் அலன் - தந்தையாவான் கந்துக் கடனே, அரசனல்லன்; என - என்று; பால்நிலத்து உறையும் தீதேன் அனையவாய் அமிர்தம் ஊற - பாலிடத்தே தங்கும் இனிய தேனைப் போன்றனவாய் இனிமையூறும்படி; குணத்தின் மிக்க மான் நலம் கொண்ட நோக்கி - குணத்திற் சிறந்தவளும், மானின் அழகைக்கொண்ட நோக்கத்தை யுடையவளுமான விசயை; மகன் மனம் மகிழச் சொன்னாள் - சீவகன் மனங்களிக்கக் கூறினான்.
|
(வி - ம்.) இருமுது குரவர்க்குந் துன்பஞ் செய்தே னென்றலின், உனக்கு இவரன்றோ இருமுது குரவர் என்றாள், ஐயன் : முன்னிலைப் படர்க்கை.
|
( 27 ) |
1916 |
எனக்குயிர்ச் சிறுவ னாவா | |
னந்தனே யைய னல்லை | |
வனப்புடைக் குமர னிங்கே | |
வருகென மருங்கு சோ்த்திப் | |
புனக்கொடி மாலையோடு | |
பூங்குழ றிருத்திப் போற்றா | |
ரினத்திடை யேற னானுக் | |
கின்னளி விருந்து செய்தாள். | |
|