விமலையார் இலம்பகம் |
1085 |
|
|
(இ - ள்.) எனக்கு உயிர்ச் சிறுவன் ஆவான் நந்தனே; ஐயன் அல்லை - எனக்கு உயிர்போலும் சிறுவனாவான் நந்தட்டனே, நீ அல்லை; வனப்புடைக் குமரன் இங்கே வருக என மருங்கு சேர்த்தி - (ஆதலால்) அழகுடைய மகனே! இங்கே வருக என்று கூறி (அவனை) அருகே அணைத்து; புனக் கொடி மாலையோடு பூங்குழல் திருத்தி - புனக்கொடி போன்றாள் அவனுடைய மாலையையும் மலர்க் குழலையுந் திருத்தி; போற்றார் இனத்திடை ஏறு அனானுக்கு - பகைவர் திரளிலே சிங்கம் போன்ற நந்தட்டனுக்கு; இன் அளி விருந்து செய்தாள் - இனிய தண்ணளியாகிய விருந்தைச் செய்தாள்.
|
(வி - ம்.) உயிர்ச்சிறுவன் - உயிர்போன்ற மகன். குமரன் : விளி. புனக்கொடி : அன்மொழித்தொகை; விசயை. போற்றார் - பகைவர்.
|
( 28 ) |
1917 |
சிறகராற் பார்ப்புப் புல்லித் திருமயி லிருந்த தேபோ | |
லிறைவிதன் சிறுவர் தம்மை யிருகையி னாலும் புல்லி | |
முறைமுறை குமரர்க் கெல்லா மொழியமை முகமன் கூறி | |
யறுசுவை யமிர்த மூட்டி யறுபகல் கழிந்த பின்னாள். | |
|
(இ - ள்.) இறைவி - விசயை; சிறகரால் பார்ப்புப் புல்லித் திருமயில் இருந்ததேபோல் - சிறகினாலே குஞ்சுகளைத் தழுவி அழகிய மயில் இருந்ததைப்போல; தன் சிறுவர் தம்மை இரு கையினாலும் புல்லி - தன் மக்களை இரண்டு கையாலும் தழுவி; குமரர்க்கு எல்லாம் முறைமுறை மொழி அமை முகமன்கூறி - மற்றைய மைந்தர்கட்கெல்லாம் முறைமுறையாக இன்மொழி கலந்த முகமன் மொழிந்து; அறுசுவை அமிர்தம் ஊட்டி - அறுசுவை உண்டியை உண்பித்து; அறுபகல் கழிந்த பின்னாள் - ஆறுநாட்கள் கழிந்து ஏழாவது நாளிலே,
|
(வி - ம்.) இப்பாட்டுக் குளகம்.
|
பார்ப்பு - குஞ்சு. சிறகர் - சிறகு. புல்லி - தழுவி. இறைவி : கோப்பெருந்தேவி; விசயை. இன்மொழி என்க. அமிர்தம் - உணவு.
|
( 29 ) |
வேறு
|
1918 |
மரவ நாக மணங்கமழ் சண்பகங் | |
குரவங் கோங்கங் குடம்புரை காய்வழை | |
விரவு பூம்பொழில் வேறிருந் தாய்பொரு | |
ளுருவ மாத ருரைக்குமி தென்பவே. | |
|
(இ - ள்.) மரவம் நாகம் மணம் கமழ் சண்பகம் குரவம் கோங்கம் குடம்புரை காய் வழை - மரவமும் நாகமும் மணம் பொருந்திய சண்பகமும் குரவமும் கோங்கமும் குடம் போன்ற
|