விமலையார் இலம்பகம் |
1086 |
|
|
காயையுடைய சுரபுன்னையும்; விரவு பூம்பொழில் - கலந்த மலர்ப் பொழிலிலே; உருவமாதர் - அழகினையுடைய விசயை; வேறு இருந்து - மைந்தருடன் தனியே இருந்து; ஆய்பொருள் இது உரைக்கும் ஆராய்ந்த பொருளாகிய இதனை உரைப்பாள்.
|
(வி - ம்.) மரவம், நாகம், சண்பகம், குரவம், கோங்கம், வழை என்பன மரங்கள். புரை : உவமவுருபு. வழை - சுரபுன்னை. ஆய்பொருள் - ஆராய்ந்த பொருள். மாதர் பொருள் இது உரைக்கும் என இயைக்க. என்ப. ஏ : அசைகள்.
|
( 30 ) |
1919 |
நலிவில் குன்றொடு காடுறை நன்பொருட் | |
புலிய னார்மகட் கோடலும் பூமிமேல் | |
வலியின் மிக்கவர் தம்மகட் கோடலு | |
நிலைகொண் மன்னர் வழக்கென நோ்பவே. | |
|
(இ - ள்.) நலிவு இல் குன்றொடு காடு உறை நன்பொருள் புலியனார் மகள் கோடலும் - அழித்தற்கரிய மலையிலும் காட்டிலும் உறைகின்ற பெரும் பொருளையுடைய குறுநில மன்னர் மகளைக் கொள்ளுதலும்; பூமிமேல் வலியின் மிக்கவர் தம்மகள் கோடலும் - புவியிடை வலிய அரசர் மகளைக் கொள்ளுதலும்; நிலைகொள் மன்னர் வழக்கு என நேர்ப - தம்முன்னோர்போல் நிலைகொள்ளும் அரசரின் முறைமையென்று நூல்வல்லோர் ஒப்புவர்.
|
(வி - ம்.) நன்பொருள் என்புழி நன்மை பெருமைமேனின்றது, புலியனார் என்றது வலிமிக்க குறுநில மன்னரை. நூல்வல்லோர் நேர்ப என்க.
|
எனவே வலியின் மிக்கவர் மகளை நீ கொண்டது நன்னென்றாள்.
|
( 31 ) |
1920 |
நீதி யாலறத் தந்நிதி யீட்டுத | |
லாதி யாய வரும்பகை நாட்டுதன் | |
மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் | |
பேது செய்து பிளந்திடல் பெட்டதே. | |
|
(இ - ள்.) நீதியால் அறுத்து அந்நிதி ஈட்டுதல் - அரசியல் முறையாலே ஆறிலொன்றாக வரையறுத்து அப் பொருளைச் சேர்த்தல்; ஆதி ஆய அரும்பகை நாட்டுதல் - தொன்மையான பகையைத் தம் நெஞ்சிலே நிலைபெறுத்துதல்; முள்ளொடு முள்பகை பேதுசெய்து மோதிக் கண்டிடல் - முள்ளைக்கொண்டு முள்ளைக் களையுமாறுபோலத் தமக்குப் பகைஞராய் உறவாயிருப்பவர் இருவரைத் தம்மில் வேறுபடுத்தி ஒருவரைக்கொண்டு ஒருவரை மோதியிடுதல்; பிளந்திடல் - தம்மிற் கூடி வந்து வினை
|