விமலையார் இலம்பகம் |
1088 |
|
|
(வி - ம்.) வென்றி - வெற்றி, ஆக்கல் - உண்டாக்குதல், மேதகவு. கேம்பாடு. குன்றினார் - குறைந்தவர். பொன் : திருமகள். ஆகம் - மார்பு.
|
( 34 ) |
1923 |
பொன்னி னாகும் பொருபடை யப்படை | |
தன்னி னாகுந் தரணி தரணியிற் | |
பின்னை யாகும் பெரும்பொரு ளப்பொருள் | |
துன்னுங் காலைத்துன் னாதன வில்லையே. | |
|
(இ - ள்.) பொன்னின் பொருபடை ஆகும் - இப் பொருளாலே போருக்குரிய படையுண்டாகும்; அப் படைதன்னின் தரணி ஆகும் - அப்படையினாலே நாடு கிடைக்கும்; தரணியின் பின்னைப் பெரும் பொருள் ஆகும் - நாட்டினாலே பிறகு பெரிய பொருள் கிடைக்கும்; அப்பொருள் துன்னும் காலைத் துன்னாதன இல்லை - அப்பொருள் கைகூடுமானால் வீடும் கிடைக்கும்.
|
(வி - ம்.) பொன் - ஈண்டுப் பொருள், பொருபடை : வினைத் தொகை, தரணி - நிலம், துன்னாதன இல்லை எனவே வீடும் கிடைக்கும் என்றாளாயிற்று. துன்னாதன் - எய்துதற்கரியன.
|
( 35 ) |
1924 |
நிலத்தி னீங்கி நிதியினுந் தேய்ந்துநங் | |
குலத்திற் குன்றிய கொள்கைய மல்லதூஉங் | |
கலைக்க ணாளரு மிங்கில்லை காளைநீ | |
வலித்த தென்னென வள்ளலுங் கூறுவான். | |
|
(இ - ள்.) காளை - காளையே!; நிலத்தின் நீங்கி - நிலத்தையிழந்து; நிதியினும் தேய்ந்து - செல்வத்தினுங் குறைந்து; குலத்திற்குன்றிய கொள்கையாம் - நல்குலத்தில் தாழ்ந்த கொள்கையினை உடையேம்; அல்லதூஉம் - அல்லாமலும்; கலைக்கணாளரும் இங்கு இல்லை - (இந்நிலையை நீக்கற்குரிய) அமைச்சரும் இவ்விடத்தே இல்லை; நீ வலித்தது என் என - நீ துணிந்தது யாது என்று வினவ; வள்ளலும் கூறுவான் - சீவகனும் உரைப்பான்.
|
(வி - ம்.) நிலம் என்றது - நமக்குரிய நாடு என்பது பட நின்றது. கொள்கையம் : தன்மைப்பன்மை வினைமுற்று. அல்லதூஉம் : இன்னிசை யளபெடை. கலையைக் கண்ணாக உடையர்; அமைச்சர், காளை - விளி. வலித்தது - துணிந்தது. வள்ளல் : சீவகன்.
|
( 36 ) |
வேறு
|
1925 |
எரியொடு நிகர்க்கு மாற்ற | |
லிடிக்குரற் சிங்க மாங்கோர் | |
நரியொடு பொருவ தென்றாற் | |
சூழ்ச்சிநற் றுணையொ டென்னாம் | |
|