பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1089 

1925 பாரிவொடு கவல வேண்டா
  பாம்பவன் கலுழ னாகுஞ்
சொரிமதுச் சுரும்புண் கண்ணிச்
  சூழ்கழ னந்த னென்றான்.

   (இ - ள்.) எரியொடு நிகர்க்கும் ஆற்றல் - தீயொடு நிகர்க்கும் ஆற்றலையுடைய; இடிக்குரல் சிங்கம் ஆங்கு ஓர் நரியொடு பொருவது என்றால் - இடிபோலும் முழக்கத்தையுடைய சிங்கம் ஆங்கு ஒரு நரியுடன் போர் புரிவதென்னின்; சூழ்ச்சி நல்துணையொடு என் ஆம்? - அவ்விடத்து அருளிச் செய்த சூழ்ச்சியும் துணைகளும் என்னவாகும்?; பரிவொடு கவலவேண்டா - என்மேல் வைத்த அன்பினால் இதற்கு வருந்த வேண்டா; அவன் பாம்பு - கட்டியங்காரன் பாம்பு ஆவான்; சொரிமதுச் சுரும்பு உண் கண்ணிச் சூழ்கழல் நந்தன் கலுழன் ஆகும் - பொழியுந்தேனைச் சுரும்புகள் பருகுங் கண்ணியையும் சூழ்ந்த வீரக்கழலையுமுடைய நந்தட்டன் கருடன் ஆவான்; என்றான் - என்று சீவகன் கூறினான்.

   (வி - ம்.) 'நான் அவனுடனே பொருவதனால் சூழ்ச்சியுந் துணையும் வேண்டாமையோடு, நானும் சென்று பொரவேண்டியதில்லை ; நந்தட்டன் ஒருவனே போதும்; மேலும் இவனைக் கண்டவுடனே கட்டியங்காரன் கெடுவான்' - என்று கூறினானாகக் கொள்க.

( 37 )
1926 கெலுழனோ நந்த னென்னாக்
  கிளரொளி வனப்பு னானைக்
கலுழத்தன் கையாற் றீண்டிக்
  காதலிற் களித்து நோக்கி
வலிகெழு வயிரத் தூண்போற்
  றிரண்டுநீண் டமைந்த திண்டோள்
கலிகெழு நிலத்தைக் காவா
  தொழியுமோ காளைக் கென்றாள்.

   (இ - ள்.) நந்தன் கெலுழனோ என்னா - (அதுகேட்ட விசயை) நந்தட்டன் கலுழனோ என்று கூறி; கிளர் ஒளி வனப்பினானைக் கலுழத் தன் கையால் தீண்டி - விளங்கும் ஒளியும் அழகும் உடைய அவனை மனமுருகும்படி தன் கையினாலே தீண்டி; காதலிற் களித்து நோக்கி - அன்பினாற் களிப்புற்றுப் பார்த்து; வலிகெழு வயிரத் தூண்போல் திரண்டு நீண்டு அமைந்த திண்தோள் - ஆற்றல்பொருந்திய வயிரத் தூணைப்போலத் திண்ணியவாய்த் திரண்டு நீண்டு அமைந்த தோள்கள்; கலிகெழு நிலத்தைக் காளைக்குக் காவாது ஒழியுமோ என்றாள் - கட்டியங்