விமலையார் இலம்பகம் |
1090 |
|
|
காரனிடத்துப் பொருந்திய நிலததைக் காளைக்குக் கொண்டு தந்து காவாமல் நீங்குமோ என்றாள்.
|
(வி - ம்.) காளை : சீவகன். கலி - கட்டியங்காரன். தந்தென வருவிக்க.
|
கெலுழன் - கலுழன்; கருடன். கலுழ - மனமுருகும்படி. இத் திண்டோள் என்க. ஒழியுமோ என்புழி ஓகாரம் எதிர்மறை அதன் உடன்பாட்டுப் பொருளை வலியுறுத்தி நின்றது. காளைக்கு; முன்னிலைப் படர்க்கை.
|
( 38 ) |
1927 |
இடத்தொடு பொழுது நாடி | |
யெவ்வினைக் கண்ணு மஞ்சார் | |
மடப்பட லின்றிச் சூழ | |
மதிவல்லார்க் கரிய துண்டோ | |
கடத்திடைக் காக்கை யொன்றே | |
யாயிரங் கோடி கூகை | |
யிடத்திடை யழுங்கச் சென்றாங் | |
கின்னுயிர் செகுத்த தன்றே. | |
|
(இ - ள்.) கடத்திடைக் காக்கை ஒன்றே - காட்டிலுள்ள ஒரு காக்கையே; ஆயிரங்கோடி கூகை இடத்திடை - எண்ணிறந்த கூகையிருக்கின்ற இடத்திலே; அழுங்கச் சென்று - அவை வருந்துமாறு பகற்காலத்தே சென்று; ஆங்கு இன்உயிர் செகுத்தது அன்றே? - அங்கே அவற்றின் இனிய உயிரைக் கெடுத்தது அன்றோ?; (ஆகையால்) இடத்தொடு பொழுதும் நாடி - இடத்தையும் காலத்தையும் எண்ணி; எவ்வினைக் கண்ணும் அஞ்சார் - ஆண்டுச் செய்யும் எத் தொழிலுக்கும் அஞ்சாராய்; மடப்படல் இன்றிச் சூழும் மதி வல்லார்க்கு - அறியாமையிற்படுதலில்லாமல் ஆராயும் அறிவினையுடையார்க்கு; அரியது உண்டோ? - முடியாதது உளதோ?
|
(வி - ம்.) இடம் - தகுந்த இடம். பொழுது - தகுந்த பொழுது. ”ஞாலங் கருதினுங் கைகூடும், காலம் கருதி இடத்தாற் செயின்” என்றார் வள்ளுவனாரும் (குறள். 484) ஆயிரங்கோடி காக்கை என்றது மிகுதிக்கோர் எண் காட்டியவாறு. எண்ணிறந்த காக்கை என்றவாறு.
|
”பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும் |
|
வேந்தர்க்கு வேண்டும் பொழுது” (குறள். 481) |
|
என்றார் வள்ளுவனாரும்.
|
( 39 ) |
1928 |
இழைபொறை யாற்ற கில்லா | |
திட்டிடை தளர நின்ற | |
குழைநிற முகத்தி னார்போற் | |
குறித்ததே துணிந்து செய்யார் | |
|