விமலையார் இலம்பகம் |
1092 |
|
|
ஊழிவாய்த்தீ - ஊழிமுடி வினுலகத்தைஅழிக்கும் நெருப்பு. ஆழி - சக்கரப்படையுமாம். குருதிக் கடலிடத்தே என்றுமாம். துஞ்ச - இறந்துபட. மாழை - பொன். பாழி - வலிமை.
|
( 41 ) |
1930 |
பொருவருங் குரைய மைந்தர் பொம்மென வுரறி மற்றித் | |
திருவிருந் தகன்ற மார்பன் சேவடி சோ்ந்த யாங்க | |
ளெரியிருந் தயரு நீர்மை யிருங்கதி ரேற்ற தெவ்வர் | |
வருபனி யிருளு மாக மதிக்க வெம் மடிக ளென்றார். | |
|
(இ - ள்.) பொரு அருமைந்தர் பொம்என உரறி - உவமை கூறுதற்கரிய (பதுமுகன் நீங்கலான) தோழர்கள் கடுக முழங்கி; திரு இருந்து அகன்ற மார்பன் சேவடி சேர்ந்த யாங்கள் - திருமகள் தங்கிய பரந்த மார்பனாகிய சீவகனுடைய சேவடியை அடைந்த யாங்கள்; எரிஇருந்து அயரும் நீர்மை இருங்கதிர் - (வெப்பத்திற்கு யாம் ஆற்றேம் என்று) தீசோர்வுற்றிருந்து அயரும் தன்மையையுடைய ஞாயிறு ஆகவும்; ஏற்ற தெவ்வர் வருபனி இருளுமாக-எம்மை எதிர்ந்த பகைவர் பனியும் இருளுமாகவும்; எம் அடிகள் மதிக்க என்றார் - எம் அடிகள் மதித்திடுக என்றனர்.
|
(வி - ம்.) குரைய : அசை. பொம்மென : குறிப்புமொழி. திருவிருந்த மார்பன் எனச் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக. மார்பன் : சீவகன். இருங்கதிர் - ஞாயிறு. தெவ்வர் - பகைவர்.
|
( 42 ) |
வேறு
|
1931 |
கார்தோன்ற வேம லருமுல்லை கமலம் வெய்யோன் | |
றோ்தோன்ற வேம லருஞ்செம்மனின் மாமன் மற்றுன் | |
சீர்தோன்ற வேம லருஞ்சென்றவன் சொல்லி னோடே | |
பார்தோன்ற நின்ற பகையைச் செறற் பாலையென்றாள். | |
|
(இ - ள்.) செம்மல்! - செம்மலே!; முல்லை கார் தோன்றவே மலரும் - முல்லை கார் தோன்றினால் மலரும்; கமலம் வெய்யோன் தேர் தோன்றவே மலரும் - தாமரை ஞாயிற்றின் தேரைக் கண்டால் மலரும்; மாமன் உன் சீர்தோன்றவே மலரும் - (அவ்வாறே) நின் மாமன் உன்னுடைய சீர்தோன்றிய பொழுதே மலரும்; சென்று அவன் சொல்லினோடே பார்தோன்ற நின்ற பகையைச் செறற்பாலை என்றாள் - (ஆதலால்) நீ அவனிடத்தே சென்று அவன் மொழிப்படியே உலகம் நின்னாலே விளங்க, நிலை பெற்று நின்ற பகையைக் கொல்வாயாக என்றாள் விசயை.
|
(வி - ம்.) கார் - கார்ப்பருவம். கமலம் - தாமரை. வெய்யோன் - ஞாயிறு. செம்மல் : அண்மைவிளி. மாமன் என்றது, கோவிந்தனை. நின்சீர் தோன்றிய அளவிலேயே நின் மாமன் (மனம்) மலரும் என்க. பார்தோன்ற - உலகம் விளங்கும்படி. பகை : கட்டியங்காரன்.
|
( 43 ) |