| விமலையார் இலம்பகம் |
1095 |
|
|
|
விடுத்த மணமும்; பூவிரி கோதையர் புனைந்த சாந்தமும் - மலர் நிறைந்த மாலைமகளிர் அணிந்த சந்தன மணமும்; ஏவலாற்கு எதிர் எதிர் விருந்து செய்த - வில்வல்லானுக்கு எதிரெதிராக விருந்தூட்டின.
|
|
(வி - ம்.) தெகிழ்ந்த - நெகிழ்ந்த. சாந்தம் - சந்தனங் குங்குமம் முதலியன. ஏ - எய்தற்றொழில்.
|
( 47 ) |
| 1936 |
கரும்பின்மேற் றொடுத்ததேன் கலிகொ டாமரைச் | |
சுரும்பின்வாய்த் துளித்தலிற் றுவைத்த வண்டொடு | |
திருந்தியாழ் முரல்வதோர் தெய்வப் பூம்பொழிற் | |
பொருந்தினான் புனைமணிப் பொன்செய் பூணினான். | |
|
|
(இ - ள்.) புனை மணிப் பொன் செய் பூணினான் - புனைவுற்ற மணிகள் இழைத்த பொன்னணிகலமுடையான்; கரும்பின் மேல் தொடுத்த தேன் கலிகொள் தாமரைச் சுரும்பின் வாய்த் துளித்தலின் - கரும்பினிடத்து வண்டுகளால் வைக்கப்பட்ட தேன், ஆரவாரமுடைய, தாமரை மலரிலுள்ள சுரும்பின் வாயிலே துளித்தலின்; துவைத்த வண்டொடு திருந்தியாழ் முரல்வது - ஒலித்த வண்டுகளோடு சுரும்புகள் யாழ்போல முரலுவதாகிய; ஓர் தெய்வப் பூம்பொழில் பொருந்தினான் - ஒரு தெய்வத்தன்மை பொருந்திய மலர்ப்பொழிலிலே தங்கினான்.
|
|
(வி - ம்.) கலி - இசை. இனி தழைத்தலையுடைய தாமரையுமாம். சுரும்பு - வண்டு; யாழ்போல முரல்வது என்க. பூணினான் : சீவகன்.
|
( 48 ) |
| 1937 |
பொறைவிலங் குயிர்த்தன பொன்செய் மாமணிச் | |
செறிகழ லிளைஞருஞ் செல்ல னீங்கினார் | |
நறைவிரி கோதையர் நாம வேலினாற் | |
கறுசுவை நால்வகை யமுத மாக்கினார். | |
|
|
(இ - ள்.) விலங்கு பொறை உயிர்த்தன - குதிரை முதலியன சுமத்தலைவிட்டு இலைப்பாறின; பொன்செய் மாமணிச் செறிகழல் இளைஞரும் செல்லல் நீங்கினார் - பொன்னாற்செய்து மணிகளிழைத்த வீரக்கழலணிந்த வீரரும் வழிநடை வருத்தம் நீங்கினார்; நாம வேலினாற்கு - அச்சந்தரும் வேலேந்திய சீவகனுக்கு; நறைவிரி கோதையர் அறுசுவை நால்வகை அமுதம் ஆக்கினார் - தேன் பொருந்திய கோதையையுடைய மகளிர் அறு சுவையுடைய நால்வகை யுண்டியைச் சமைத்தனர்.
|
|
(வி - ம்.) விலங்கு - குதிரை முதலியன. விலங்கு பொறையுயிர்த்தன என மாறுக. செல்லல் - துன்பம்; ஈண்டு வழி நடந்த வருத்தம். நாமம் - அச்சம். அறுசுவை - கைப்பு, தித்திப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்பன. நால்வகை அமுதம் - உண்பன, தின்பன. பருகுவன, நக்குவன என்பன.
|
( 49 ) |