விமலையார் இலம்பகம் |
1098 |
|
|
(வி - ம்.) 'வியநெறியால் விடுத்தான்' (சீவக. 1884) என்றலின், இவன் நுகர்தற்குரிய மகளிர் பலரும் வந்தாரென்று கொள்க.
|
( 54 ) |
|
(இ - ள்.) கனை கதிர்க் கடவுள் கண் விழித்த காலை - மிகு கதிர்களையுடைய ஞாயிற்றால் உலகம் கண் விழித்தபோது; முருகவேளனான் - சீவகன்; நனை மலர்த் தாமரை நக்க வண்கையால் - தேனையுடைய தாமரை மலரை இகழ்ந்த வளவிய கையினால்; புனைகதிர்த் திருமுகம் கழுவி - ஒப்பனை செய்த கதிரனைய அழகிய முகத்தைக் கழுவி; முனைவனுக்குப் பூமழை இறைஞ்சினான் - இறைவனுக்குப் பூமழை பெய்து வணங்கினான்.
|
(வி - ம்.) 'ஞாயிறு கண்விழித்த காலை' என்றுங் கொள்க. நனை மலர் : முதற்கேற்ற அடை; 'பெய்து' என வருவித்துப் 'பூமழை பெய்து' எனக் கொள்க. 'முனைவனை' வணங்கினான் எனக்கொண்டு இரண்டனுருபு மயக்கம் எனினும் ஆம்.
|
( 55 ) |
|
(இ - ள்.) நாமவேலினான் - சீவகன்; நாட்கடன் கழித்தபின் - காலைக்கடன்களை முடித்தபிறகு; வாள் கடி எழில் நகர் வண்மை காணிய - ஒளியின் மிகுதியையும் அழகையும் உடைய இராசமாபுரத்தின் வளங்காணும் பொருட்டு; தோள் பொலி மணிவளைத் தொய்யின் மாதரார் - தோளிலே அழகுசெயும் மணிகளிழைத்த வளைகளையும் மார்பிலே தொய்யிற் கோலத்தையும் உடைய மங்கையர்; வேட்பது ஓர் வடிவொடு - விரும்பத்தக்கதாகிய ஒரு வடிவத்துடன்; விரைவின் எய்தினான் - விரைந்து சென்றான்.
|
(வி - ம்.) நாட்கடன்-விடியற்காலத்தே செய்தற்குரிய கடமைகள். வாட்படையினது காவலையும் அழகையும் உடைய நகருமாம். காணிய - காணுதற்கு, மணிவளை மாதரார், தொய்யின் மாதரார் எனத் தனித்தனி கூட்டுக.
|
( 56 ) |
|