விமலையார் இலம்பகம் |
1099 |
|
|
(இ - ள்.) அலத்தகக் கொழுங்களி இழுக்கி - (சீவகன் கால்) இங்குலிகச் சேற்றிலே வழுக்கி; அம் சொலார் புலத்தலின் களைந்த பூண் இடறி - மகளிர் புலவியாற் களைந்தெறிந்த பூணிலே இடறி; பொன் இதழ் நிலத்து உகும் மாலை கால் தொடர்ந்து - அழகிய இதழையுடைய நிலத்திலே சிந்திய மாலைகள் காலிலே சேரத் தொடரப்படுதலாலே; நீள்நகர் செலக் குறைபடாது ஓர் செல்வம் மிக்கது - அந்தப் பெருநகரம் செல்லத்தொலையாதிருப்பதாகிய ஒப்பற்ற செல்வத்திற் சிறந்திருந்தது.
|
(வி - ம்.) அலத்தகக் கொழுங்களி - இங்குலிகமாகிய கொழுவிய குழம்பு. பூண் - அணிகலம். நீணகர் : வினைத்தொகை; இராசமாபுரம்.
|
( 57 ) |
வேறு
|
|
(இ - ள்.) கத்திகைக் கழுநீர் கமழ் கோதையர் - கத்திகையாகத் தொடுத்த கழுநீர் மலர்மாலையராகிய மங்கையரின்; பத்தியிற்படு சாந்து அணி வெம்முலை - ஒழுங்காகச் சாந்தணிந்த விருப்பூட்டு்ம முலை; சித்தியிற் படர் சிந்தையினாரையும் - சித்தியிலே செல்லும் சிந்தையை யுடையவர்களையும்; இத் திசைப் படர்வித்திடு நீர - இல்லறத்திலே செலுத்திவிடும் தன்மையை உடையவாயிருக்கும்.
|
(வி - ம்.) கத்திகை - மாலை தொடுக்கும் வகையில் ஒன்று; குருக்கத்தியும் ஆம்.
|
வஞ்சி - ஒருவகைக் கொடி. நுசுப்பினார் - இடையினையுடைய மகளிர். பஞ்சி - அலத்தகம். பாடகம் - ஒருகாலணி. இஞ்சி - மதில்.
|
( 58 ) |
|
(இ - ள்.) வஞ்சி வாட்டிய வாள்மின் நுசுப்பினார் - வஞ்சிக் கொடியை (மென்மையால்) வருத்திய ஒளிபொருந்திய மின்னிடையார்; பஞ்சி ஊட்டிய பாடகச் சீறடி - செம்பஞ்சியை ஊட்டிய பாடகம் அணிந்த சிற்றடியை; குஞ்சி ஊட்டிய மைந்தர் குழாம் அலால் - குஞ்சியிலே சூட்டிய மைந்தரின் திரள் அல்லது; இஞ்சி வட்டம் இடம் பிறிது இல்லை - வட்டமாகிய மதிலின் இடம் எல்லாம் வேறு திரள் இல்லை.
|
( 59 ) |