பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1100 

1948 மின்னி னீள்கடம் பின்னெடு வேள்கொலோ
மன்னு மைங்கணை வார்சிலை மைந்தனோ
வென்ன னோவறி யோமுரை யீரெனாப்
பொன்னங் கொம்பனை யார்புலம் பெய்தினார்.

   (இ - ள்.) மின்னின் நீள் கடம்பின் நெடுவேள் கொலோ? - மேனியின் ஒளியாலே நீண்ட கடப்பந்தாரானாகிய முருகவேளோ?; மன்னும் ஐங்கணை வார்சிலை மைந்தனோ? - பொருநதிய ஐங்கணையையும் நீண்ட கருப்பு வில்லையும் உடைய காமவேளோ?; என்னனோ? - யாரோ?; அறியோம், உரையீர் எனா - அறிகிலோம், நீர் அறிந்தால் உரைப்பீராக என்று; பொன் அம்கொம்பு அனையார் புலம்பு எய்தினார் - அழகிய பொற்கொடி போன்ற மகளிர் வருந்தினர்.

   (வி - ம்.) நெடுவேள் - முருகன். மைந்தன் : காமன். என்னனோ - யாவனோ. புலம்பு - வருத்தம்.

( 60 )
1949 விண்ண கத்திளை யானன்ன மெய்ப்பொறி
பண்ண லைக்கழி மீன்கவர் புள்ளென
வண்ண வார்குழ லேழையர் வாணெடுங்
கண்ணெ லாங்கவர்ந் துண்டிடு கின்றவே.

   (இ - ள்.) விண் அகத்து இளையான் அன்ன - வானகத்திலுள்ள முருகவேளைப் போன்ற; மெய்ப் பொறி அண்ணலை - உத்தம இலக்கணங்களையுடைய சீவகனை; கழிமீன் கவர் புள் என - கழியிலுள்ள மீனைக் கவர நோக்கும் மீன்கொத்திப் பறவை போல; வண்ணவார் குழல் ஏழையர் - அழகிய நீண்ட குழலையுடைய மங்கையரின்; வாள் நெடுங் கண் எலாம் கவர்ந்து உண்டிடுகின்ற - வாளனைய நீண்ட கண்களெல்லாம் கவர்ந்து உண்கின்றன ஆயின.

   (வி - ம்.) இது தொழில் உவமம்.

   இளையான் : முருகன். மெய்ப்பொறி : உடலின்கண் உத்தம விலக்கணங்கள். அண்ணலை : சீவகனை. ஏழையர் - மகளிர். உண்டிடுகின்ற: ஒருசொல்.

( 61 )

வேறு

1950 புலாத்தலைத் திகழும் வைவேற்
  பூங்கழற் காலி னானை
நிலாத்தலைத் திகழும் பைம்பூ
  ணிழன்மணி வடத்தோ டேந்திக்