பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1101 

1950 குலாய்த்தலைக் கிடந்து மின்னுங்
  குவிமுலை பாய வெய்தாய்க்
கலாய்த்தொலைப் பருகு வார்போற்
  கன்னியர் துவன்றி னாரே.

   (இ - ள்.) புலா தலைத் திகழும் வைவேல் பூங்கழல் காலினானை - புலால் நாற்றம் தலையிலே பொருந்திய கூரிய வேலையும் பூங்கழலணிந்த காலையும் உடைய சீவகனை; நிலாத்தலைத் திகழும் பைம்பூண் நிழல் மணி வடத்தோடு ஏந்தி - நிலவு தன்னிடத்தே விளங்கும் பசிய பூணை ஒளிவிடும் மணி வடத்தோடே சுமந்து; குலாய்த்தலைக் கிடந்து மின்னும் - அவை குலவித் தலையிலே கிடந்து மின்னுகின்ற; குவிமுலை பாய - குவிந்த முலைகள் பாய; வெய்தாய்க் கலாய்த் தொலைப் பருகுவார்போல கலவியிலே வெய்தாய்ப் புலந்து அப்புலவி தீர்ந்து நுகர்வாரைப்போல; கன்னியர் துவன்றினார் - கன்னிப் பெண்கள் நெருங்கினர்.

   (வி - ம்.) 'ஏந்திக் குவிந்த முலை' எனக் கூடடுவர் நச்சினார்க்கினியர்.

   புலா - புலானாற்றம் : ஆகுபெயர். வை - கூர்மை. காலினானை: சீவகனை. ஒலை - ஒல்லை; விரைந்து . துவன்றினார் - நெருங்கினார்.

( 62 )
1951 வேனெடுங் கண்க ளம்பா
  விற்படை சாற்றி யெங்குந்
தேனெடுங் கோதை நல்லார்
  மைந்தனைத் தெருவி லெய்ய
மானெடு மழைக்க ணோக்கி
  வானவர் மகளு மொப்பாள்
பானெடுந் தீஞ்சொ லாளோர்
  பாவைபந் தாடு கின்றாள்.

   (இ - ள்.) தேன் நெடுங் கோதை நல்லார் - தேனையுடைய நீண்ட கோதையுடைய மகளிர்; வேல் நெடுங் கண்கள் அம்புஆ - வேலனைய நீண்ட கண் அம்பாக; வில் படை சாற்றி - வில்லாகிய படையை அமைத்து; மைந்தனைத் தெருவில் எங்கும் எய்ய - சீவகனைத் தெருவிலே எங்கும் நின்று எய்துகொண்டிருக்க; மான் நெடு மழைக்கண் நோக்கி - மானின் நீண்ட குளிர்ந்த கண்போலும் கண்களையுடையாள்; வானவர் மகளும் ஒப்பாள் - விண்ணவர் மகளைப் போன்றவள்; பால் நெடுந் தீ சொலாள் ஓர் பாவை - பாலனைய பெருமைமிக்க இனிய சொல்லாளாகிய ஒருபாவை; பந்து ஆடுகின்றாள் - பந்தாடிக்கொண்டிருக்கிறாள்.