விமலையார் இலம்பகம் |
1103 |
|
|
(இ - ள்.) மாலையுள் கரந்த பந்து வந்து கைத்தலத்த ஆம் - மாலையிலே மறைந்த பந்து வந்து கையிடத்திலாகும்; ஏலம் நாறு இருங்குழல் புறத்த - மயிர்ச் சாந்து மணக்கும் கருங்குழலின் புறத்தனவாகிய பந்துகள்; வாள் முகத்த ஆம் - ஒளி பொருந்திய முகத்தனவாக ஆகும்; நூலின் நேர் நுசுப்பு நோவ உச்சி மாலை உள்ள ஆம் - நூலைப் போன்ற இடைவருந்தத் தலையிலே சென்ற பந்து மார்பின் மாலையிலே திரும்ப வரும் ; மேலெழுந்த மீநிலத்த விரல கைய ஆகும் - மாலையின் மேலேபோய் உயர்ந்த பந்து மீண்டும் விரலிடத்தன, கையிடத்தன ஆகும்.
|
(வி - ம்.) கரந்த - மறைந்த. ஏலம் - மயிர்ச்சாந்து. இருங்குழல் - கரிய கூந்தல். நூலின்நேர் என்புழி 'நேர்' உவமச்சொல். விரல - விரலிடத்துளளன, கைய - கையிடத்துள்ளன.
|
( 66 ) |
1955 |
கொண்டுநீங்கல் கோதைவேய்தல் | |
குங்குமம்ம ணிந்துரா | |
யெண்டிசையு மேணியேற்றி | |
லங்கநிற்றல் பத்தியின் | |
மணிடி லம்வ ரப்புடைத்தன் | |
மயிலிற்பொங்கி யின்னணம் | |
வண்டுந்தேனும் பாடமாதர் | |
பந்துமைந்துற் றாடுமே. | |
|
(இ - ள்.) மாதர் - அப்பெண்; வண்டும் தேனும் பாட - வண்டும் தேனும் தேனை நுகராமல் நின்றுபாட; மயிலின் பொங்கி - மயில் போலப் பொங்கி; எண்திசையும் கொண்டு நீங்கல் - எட்டுத்திசையினும் பந்தைக் கொண்டு உலாவுதல்; கோதை வேய்தல் - இடையிலே மாலை அணிதல்; குங்குமம் அணிந்து உராய் - குங்குமம் அணிந்து பரந்து; ஏணி ஏற்று இலங்க நிற்றல் - படிமுறையாக அடித்தல்; பத்தியின் மண்டிலம் வரப் புடைத்தல் - பத்தியுடன் தன்னைச் சூழ்ந்து வர அடித்தல்; இன்னணம் மைந்துற்றுப் பந்து ஆடும் - இந் நிலைமைகளிலே வலியுற்று இங்ஙனம் பந்தாடும்.
|
(வி - ம்.) அடித்த பந்து வந்து வீழுதற்குமுன் கோதை வேய்தலும் குங்குமம் அணிதலும் செய்து என்பதாம். ஏணியேற்று - படிப்படியாக உயரும்படி பந்தினை அடித்தல். தேனுகர்தற்குச் செவ்விபெறாமல் வண்டுந்தேனும் பாட என்க. பத்தியின் மண்டிலம் வரப்புடைத்தல் என்பது, ஒழுங்காக வட்டமாகத் தன்னைச்சுற்றி வரும்படி பந்துகளையடித்தல். மைந்து - வலிமை. மேற்கூறியவாறு வலிமையுடன் பந்ததாடினாள் என்க.
|
( 67 ) |