விமலையார் இலம்பகம் |
1105 |
|
|
1958 |
வீழ்ந்தபந்தின் மேல்விரைந்து | |
மின்னினுண் ணுசுப்பினாள் | |
சூழ்ந்தகாசு தோன்றவந்து | |
கின்னெகிழ்ந்து பூங்குழ | |
றாழ்ந்துகோதை பொங்கிவீழ்ந்து | |
வெம்முலைக டைவரப் | |
போழ்ந்தகன்ற கண்ணிவந்து | |
பூங்கொடியி னோக்கினாள். | |
|
(இ - ள்.) மின்னின் நுண் நுசுப்பினாள் - மின் போன்ற நுண்ணிடையாளாகிய; போழ்ந்து அகன்ற கண்ணி - ஆவியைப் பிளந்து பரவிய கண்ணினாள்; அம்துகில் நெகிழ்ந்து சூழ்ந்து காசு தோன்ற - அழகிய ஆடை நெகிழ்தலின் இடையிலணிந்த மேகலையின் காசுகள் தெரிய; பூங்குழல் தாழ்ந்து கோதை பொங்கி வீழ்ந்து - அழகிய குழல் தாழ்தலின் அதிலுள்ள கோதை பொங்கி விழுந்து; வெம் முலைகள் தைவர - வெவ்விய முலைகளைத் தடவிநிற்க; வீழ்ந்த பந்தின்மேல் விரைந்து - விழுந்த பந்தின் மேல் விரைந்து வந்து; பூங்கொடியின் நோக்கினாள் - மலர்க்கொடிபோல நோக்கினாள்.
|
(வி - ம்.) நுசுப்பினாள் ஆகிய கண்ணி என்க. காசு : ஆகுபெயர். துகின்னெகிழ்ந்து - னகரம் வண்ணத்தான் விரிந்தது. பூங்கொடி போல என்க.
|
( 70 ) |
வேறு
|
1959 |
மந்தார மாலை மலர்வேய்ந்து மகிழ்ந்து தீந்தேன் | |
கந்தாரஞ் செய்து களிவண்டு முரன்று பாடப் | |
பந்தார்வஞ் செய்து குவளைக்கண் பரப்பி நின்றாள் | |
செந்தாம ரைமேற் றிருவின்னுரு வெய்தி நின்றாள். | |
|
(இ - ள்.) மந்தார மாலை மலர் வேயந்து - மந்தார மாலையின் மலரை மொய்த்து; தீ தேன் மகிழ்ந்து கந்தாரஞ் செய்து களிவண்டு முரன்று பாட - இனிய தேனைப் பருகி மகிழ்ந்து, காந்தாரம் என்னும் பண்ணை அமைத்துக் களிப்பையுடைய வண்டுமுரன்று பாடும்படி; பந்து ஆர்வம் செய்து குவளைக் கண் பரப்பி நின்றாள் - பந்தின்மேல் ஆர்வங் கொண்டு குவளை மலரனைய கண்களை நாற்றிசையிலும் ஓடவிட்டு நின்றவள்; செந்தாமரை மேல் திருவின் உரு எய்தி நின்றாள் - செந்தாமரை மலர்மேல் உள்ள திருமகளின் வடிவத்தைக் கொண்டு நின்றாள்.
|
(வி - ம்.) இமையாது பந்தெங்கே என்று நோந்கலின், திருமகளைப் போன்றிருந்த அவள் இமைத்தற் குறை நீங்கித் திருமகளின் உருவத்
|