விமலையார் இலம்பகம் |
1108 |
|
|
1964 |
நெஞ்சங் கலங்கி நிறையாற்றுப் படுத்து நின்றா | |
ளஞ்செங் கழுநீ ரலாந்தம்மதி வாண்மு கத்தே | |
வஞ்சம் வழங்கா தவன்கண்களி னோக்க மாதோ | |
தஞ்சம் வழங்கித் தலைக்கொண்டது காம வெந்தீ. | |
|
(இ - ள்.) நெஞ்சம் கலங்கி நிறை ஆற்றுப்படுத்து நின்றாள் - (இவ்வாறு) உள்ளம் கலங்கி நிறையைப் போக்கி நின்றவளது; அம் செங்கழுநீர் அலர்ந்த மதிவாண் முகத்தே - அழகிய செங்கழுநீர் மலர் மலர்ந்த திங்களைப் போலும் ஒளியுறும் முகத்தே; வஞ்சம் வழங்காதவன் கண்களின் நோக்க - பொய் கூறாதவன் தன் கண்ணாலே நோக்கினானாக; காம வெந்தீ - (அவள் எதிர் நோக்கினால் நிகழ்ந்த) கொடிய காமத்தீ; தஞ்சம் வழங்கித் தலைக்கொண்டது - எளிமையை அவனுக்கு முதலிற் கொடுத்துப் பின்பு தலைமட்டங் கொண்டது.
|
(வி - ம்.) நின்றாள் : வினையாலணையும் பெயர்; வழங்காதவன் என்பதுமது. மாது, ஓ: இரண்டும் அசை. தஞ்சம் - எளிமை.
|
( 76 ) |
1965 |
பூவுண்ட கண்ணாள் புருவச்சிலை கோலி யெய்ய | |
வேவுண்ட நெஞ்சிற் கிடுபுண்மருந் தென்கொ லென்னா | |
மாவுண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கிக் | |
கோவுண்ட வேலான் குழைந்தாற்றல னாயி னானே. | |
|
(இ - ள்.) பூ உண்ட கண்ணாள் புருவச் சிலை கோலி எய்ய பூப்போலும் கண்ணாள் புருவமாகிய வில்லை வளைத்துக் கண்ணாகிய அம்பாலே எய்தலின்; ஏ உண்ட நெஞ்சிற்கு இடு புண் மருந்து என்கொல் என்னா - அந்த அம்பாலே தாக்கப்பெற்ற நெஞ்சிற் புண்ணுக்கு இடும் மருந்து யாது என்று ஆராய்ந்து மா உண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கி - (வேறு மருந்து இன்மையின்) மாவடுவைப் போன்ற கண்களையுடைய அம் மங்கையைத் திரும்பவும் நோக்கி; கோவுண்ட வேலான் - பகையரசரை உண்ட வேலான்; குழைந்து ஆற்றலன் ஆயினானே (அவள் காதற் குறிப்பு நோக்கினாலே) குழைவுற்று ஆற்றாமையுடையனாயினான்.
|
(வி - ம்.) நச்சினார்க்கினியர் குழைந்து என்னுஞ் சொல்லை 'என்னா' என்னுஞ் சொல்லின்பின் பெய்து, 'குழைந்து வேறு மருந்தின் மையின், இவளே மருந்தென்று அவளை மீண்டும் பார்த்து, ஆண்டுப் பெறற்குக் கூட்டியுரைக்குங் குறிப்புரையாகிய நோக்காலே உயிரைப் பெற்று ஆற்றாமையிலே நின்றான்' என்பர்.
|
மற்றும், 'இதனால், முன்பு போலப் பொது நோக்குப் பெறின், இறந்துபடுதலுக்கு மருந்தன்றென்று கருதினானாம்' என்பர்.
|
( 77 ) |