விமலையார் இலம்பகம் |
1109 |
|
|
1966 |
காமக் கடுநோய்க் கனல்சூழ்ந்துடம் பென்னு மற்றிவ் | |
வீமத்தி னோடு முடனேசுட வேக லாற்றான் | |
றூமத்தி னார்ந்த துகிலேந்திய வல்கு றாதை | |
பூமொய்த் திருந்த கடைமேற்புலம் புற்றி ருந்தான். | |
|
(இ - ள்.) காமக் கொடு நோய் கனல்சூழ்ந்து - கொடிய காம நோயாகிய தீயினால் சூழப்பெற்று; உடம்பு என்னும் இவ் ஈமத்தினோடும் உடனே சுட - உடம்பு என்னும் விற்குடனே உயிரை முழுக்கச் சுடுதலின்; ஏகல் ஆற்றான் - போக வியலாதவனாய் ; தூமத்தின் ஆர்ந்த துகில் ஏந்திய அல்குல்தாதை - அகிற் புகையினால் நிறைந்த ஆடையணிந்த அல்குலாளின் தந்தையாகிய சாகரதத்தனின் ; பூ மொய்த்திருந்த கடை மேல் புலம்பு உற்று இருந்தான் - மலர் மாலைகள் மொய்த்திருந்த கடையின் மேல் வருத்தமுற்றிருந்தான்.
|
(வி - ம்.) ஈமம் - விறகு. ஈமத்தினோடு உயிரைச் சுட என்க. அல்குல் : விமலை. புலம்புற்று - வருந்தி.
|
( 78 ) |
வேறு
|
1967 |
நாவிநோய் செய்த நறுங்குழலா ணாணீலக் | |
காவிநோய் செய்த கருங்கயற்கட் பூங்கொடியென் | |
னாவிநோய் செய்த வணங்கென் றறியாதேன் | |
மேவிநோய் தீர வினாத்தருவா ரில்லையே. | |
|
(இ - ள்.) நாவி நோய் செய்த நறுங்குழலாள் - புழுகுக்கு வருத்தம் உண்டாக்கிய நறுங் கூந்தலாளை; நீலக் காவி நோய் செய்த கருங்கயல் கண் பூங்கொடி - கருங்குவளையை வருந்திய கரிய கயற்கண்களை யுடையதொரு பூங்கொடியை; என் ஆவி நோய் செய்த அணங்கு - என் உயிரை வருத்திய தெய்வமங்கை ; என்று அறியாதேன்-என்றுரைத்து அறிவுகலங்கினேனை; மேவி நோய் தீர வினாத் தருவார் இல்லை - நெருங்கி நோய் நீங்க என்னுற்றனை என்று வினவுவார் இல்லையே!
|
(வி - ம்.) கயற்கண் : பெயர். 'கொடியைத் தெய்வமென்றே கருதி நறுங்குழலாளாக உணராமற் பின்னும் மயங்கினேனை' என உரைப்பர் நச்சினார்க்கினியர்.
|
( 79 ) |
1968 |
தெண்ணீர்ப் பனிக்கயத்து மட்டவிழ்ந்த தேங்குவளைக் | |
கண்ணீர்மை காட்டிக் கடல்போ லகன்றவென் | |
னுண்ணீர்மை யெல்லா மொருநோக்கி னிற்கவர்ந்த | |
பெண்ணீர்மை மேனாட் பிறந்து மறியுமோ. | |
|