பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1111 

1970 றாருடுத்த நீண்மார்பர்
  தம்முயிர்தாம் வேண்டுபவே
னீருடுத்த விந்நகரை
  நீத்திட டொழியாரோ.

   (இ - ள்.) வார் உடுத்த வெம்முலையை வண்டு ஆர் பூஙகோதையை - கச்சணிந்த வெம்முலையையுடைய வண்டுகள் நிறைந்த மலர்க் கோதையாளை; பேர் கொடுத்தார் பெண் என்றார் - பெயர் கொடுத்தவர் பெண்ணென்றனர்; கூற்றமே என்றிட்டால் - கூற்றம் என்று கூறுவராயின்; தார் உடுத்த நீள மார்பர் தம் உயிர்தாம் வேண்டுபவேல் - மாலையணிந்த பரந்த மார்பினார் தம் உயிரைத் தாம் விரும்புவரேல்; நீர் உடுத்த இந்நகரை நீத்திட்டு ஒழியாரோ? - நீர் சூழ்நத இந்த நகரத்தை விட்டுப் போகாரோ?

   (வி - ம்.) 'பெயரிட்ட தந்தையார் பெண் ணென்று பெயர் கொடுத்தமையாலேயே ஆடவர் இந்நகரை விட்டுப் போகாதிருக்கின்றனர்' என்று கருதினான். 'தார் உடுத்த நீண்மார்பர்' என்ற பெயர் தந்தையையே சுட்டிற் றென்பர் நச்சினார்க்கினியர். பிற ஆடவர்க்கே அவள் காமமூட்டிக் கூற்றமாவாள். பேர் கொடுத்தார் : ஒருவரைக் கூறும் பன்மை.

( 82 )
1971 பைங்கண் மணிமகர குண்டலமும் பைந்தோடுந்
திங்கண் முகத்திலங்க்ச் செவ்வா யெயிறிலங்கக்
கொங்குண் குழறாழக் கோட்டெருத்தஞ் செய்தநோக்
கெங்கெங்கே நோக்கினு மங்கங்கே தோன்றுமே.

   (இ - ள்.) பைங்கண் மணிமகர குண்டலமும் பைந்தோடும் - பசிய கண்களையுடைய மணிகளிழைத்த மகர குண்டலமும் புதிய தோடும் ; திங்கள் முகத்து இலங்க - திங்களனைய முகத்திலே விளங்க ; செவ்வாய் எயிறு இலங்க - சிவந்த வாயிலே முறுவல் சிறிது விளங்க; கொங்கு உண் குழல் தாழ - மணமுற்ற கூந்தல் தாழ; கோட்டு எருத்தம் செய்த நோக்கு- சாய்த்த கழுத்தை வளைத்துப் பார்த்த பார்வை; எங்கெங்கே நோக்கினும் அங்கங்கே நோக்குமே-பார்த்த இடம் எங்கும் தோன்றாநின்றது.

   (வி - ம்.) இஃது எதிர் பெய்து பரிதல் ; முன் பெற்ற அரு நோக்கினை வியந்தான்.

( 83 )
1972 வாளார் மதிமுகத்த வாளோ வடுப்பிளவோ
தாளார் கழுநீரோ நீலமோ தாமரையோ
நீள்வேலோ வம்போ கயலோ நெடுங்கண்ணோ
கோளார்ந்த கூற்றமோ கொல்வான் றொடங்கினவே.