விமலையார் இலம்பகம் |
1112 |
|
|
(இ - ள்.) வாள் ஆர் மதி முகத்த - இவளுடைய ஒளி பொருநதிய திங்கள் முகத்திலே கிடக்கின்றவை; வாளோ - வாளோ?; வடுப்பிளவோ - மாவடுவின் பிளவோ?; தாள் ஆர் கழு நீரோ-தண்டையுடைய கழுநீரோ?; நீலமோ - நீல மலரோ?; தாமரையோ - தாமரை மலரோ?; நீள் வேலோ - நீண்ட வேலோ?; அம்போ - கணையோ?; நெடுங்கண்ணோ - நீண்ட கண்ணோ ?; கோளார்ந்த கூற்றமோ-கொல்லுதல் பொருநதிய கூற்றுவனோ?; கொல்வான் தொடங்கின - (எவையாயினும் என்ன?) கொல்லத் தொடங்கின !
|
(வி - ம்.) அருணோக்கத்தினாற் கண், கயல், வடுப்பிளவு, கழுநீர், நீலம், தாமரை எனவுந் தக்கன; பொது நோக்கத்தினால், கூற்றம், வாள், வேல், அம்பு எனவுந் தக்கன - இவ்விரு பகுதியும் உடையன என்று கருதியதாக நச்சினார்க்கினியர் கூறுவர்.
|
( 84 ) |
1973 |
என்றாங்கொன் மாதர் நலமெய்துவ தென்று சிந்தித் | |
தொன்றார்க் கடந்தான் புலம்புட்கொண் டிருத்த லோடு | |
மன்றே யமைந்த பசும்பொன்னட ராறு கோடி | |
குன்றாமல் விற்றான் குளிர்சாகர தத்த னென்பான். | |
|
(இ - ள்.) மாதர் நலம் எய்துவது என்று ஆம்கொல் என்று சிந்தித்து - மங்கையின் இன்பத்தை அடைவது என்று கூடுமோ என்று எண்ணி; ஒன்றார்க் கடந்தான் புலம்பு உட்கொண்டிருத்தலோடும் - பகைவரை வென்றவன் வருத்தங் கொண்டு இருந்தபோது ; அன்றே குளிர் சாகர தத்தன் என்பான் - அற்றை நாளே தங்கிய சாகரதத்தன் என்பவன் ; அமைந்த அடர் பசும்பொன் ஆறு கோடி குன்றாமல் விற்றான் - மாற்றமைந்த தகட்டுப் பொன் ஆறு கோடியென்ற எண்ணிற் குறையாமல் விற்றான்.
|
(வி - ம்.) குளிர் : திசைச்சொல்.
|
மாதர் நலம் எய்துவது என்றாங்கொல் என மாறுக. ஒன்றார் - பகைவர். கடந்தான் : சீவகன். அடர்ப்பசும்பொன் என மாறுக. அடர் - தகடு. குளிர், திசைச்சொல் என்பர் நச்சினார்க்கினியர். குளிர் என்பதற்கு இருக்கை என்பது பொருள் அவர் கருத்துப்படி. இனி, பைங்கதிர் மதியிற் றெள்ளி என்புழிப்போலச் சாகரம் என்னும் பெயர்க்கேற்ற அடையாய் நின்றது எனினுமாம்.
|
( 85 ) |
1974 |
திருமல்க வந்த திருவேயெனச் சோ்ந்து நாய்கன் | |
செருமல்கு வேலாய்க் கிடமாலிது வென்று செப்ப | |
வரிமல்கி வண்டுண் டறைமாமலர்க் கண்ணி மைந்த | |
னெரிமல்கு செம்பொ னிலமாமனொ டேறி னானே. | |
|