| விமலையார் இலம்பகம் |
1113 |
|
|
|
(இ - ள்.) நாய்கன் - சாகரதத்தன் ; திருமல்க வந்த திருவே எனச் சேர்ந்து - செல்வம் வளர்க்க வந்த திருவே என்று (சிவகனை) அடைந்து ; செரு மல்கு வேலாய்க்கு - போரிற் பல்கிய வேலையுடைய நினக்கு ; இது இடம் என்று செப்ப - இவ்வில்லம் இருப்பிடம் என்று கூற; வண்டு உண்டு வரிமல்கி அறை மாமலர்க் கண்ணி மைந்தன் - வண்டுகள் தேனைப் பருகி வரியென்னும் பண்ணை இசைக்கின்ற கண்ணியை உடைய சீவகன் எரிமல்கு செம்பொன் இலம் மாமனோடு ஏறினான் - ஒளி மிகுந்த செம்பொன் மனையை மாமனுடன் அடைந்தான்.
|
|
(வி - ம்.) 'திருவே' என்று உவப்பின் கண்பால் மயங்க உவமித்தார்.
|
|
திரு இரண்டனுள் முன்னது, செல்வம்; பின்னது, திருமகன்; சீவகனுக்கு உவமை. இடமால் என்புழி ஆல் அசை. வண்டு மல்கி உண்டு வரி அறை மலர் என இயைக்க. வரி ஒருவகைப் பண். மாமன் : சாகரதத்தன்.
|
( 86 ) |
| 1975 |
நம்பன் சிறிதே யிடைதந்திது கேட்க நாளு | |
மம்பொன் னகரு ளமைந்தேன்மற் றெனக்க மைந்தாள் | |
கம்பம் மிலாதாள் கமலைக்கு விமலை யென்பாள் | |
செம்பொன் வியக்கு நிறத்தாடிரு வன்ன நீராள். | |
|
|
(இ - ள்.) நம்பன்! சிறிதே இடைதந்து இது கேட்க - நம்பனே! சிறிது செவ்வி கொடுத்து இதனைக் கேட்க!; அம்பொன் நகருள் நாளும் அமைந்தேன் - இராசமாபுரத்தில் எப்பொழுதும் இருப்பேன் ; மற்று எனக்கு அமைந்தாள் - இனி எனக்கு வாழ்ககைத் துணைவியாக அமைந்தவள்; கம்பம் இலாதாள் - கற்பில் அசைவில்லாதவள் ; கமலைக்கு - ஆகிய கமலைக்கு, விமலை என்பாள் - விமலை என்னும் பெயரினாள்; செம்பொன் வியக்கும் நிறத்தாள் திருவன்ன நீராள் - நல்ல பொன்னும் வியக்கும் நிறத்தினாள், திருமகளனைய பண்பினாளாக,
|
|
(வி - ம்.) இப்பாட்டுக் குளகம்.
|
|
கம்பன் : விளி. இடை - செவவி. நகர் - இராசமாபுரம். அமைந்தாளாகிய விமலை. கம்பமிலாதாளாகிய விமலை எனத் தனித்தனி கூட்டுக. பொன்னோ என்று வியத்தற்குரிய நிறத்தான் என்க.
|
( 87 ) |
| 1976 |
பூம்பாவை வந்து பிறந்தாளப் | |
பிறந்த போழ்தே | |
யாம்பால வெல்லா மறிவாரன் | |
றெழுதி யிட்டார் | |
|