| விமலையார் இலம்பகம் |
1115 |
|
|
| 1978 |
ஏழாண்டின் மேலு மிரண்டாண்டிரண் டெய்தி நின்றாள் | |
வீழா நிதியு முடன்வீழ்ந்தது வில்வ லாய்க்கே | |
யூழாயிற் றொல்கு நுசுப்பஃக வுருத்து வீங்கிச் | |
சூழாரம் வைத்த முலையாணலஞ் சூழ்க வென்றான். | |
|
|
(இ - ள்.) வீழா நிதியும் உடன் வீழ்ந்தது - (அவ்வாறே) வராத செல்வமும் இன்று சேர வந்தது ;ஏழாண்டின்மேலும் இரண்டு இரண்டு ஆண்டு எய்தி நின்றாள்- இவளும் பதினொன்றைக் கடந்து பன்னிரண்டாவது ஆண்டைப் பெற்று நின்றாள்; வில்வ லாய்க்கே ஊழாயிற்று - வில்வல்லானாகிய நினக்கு நல்வினையிருந்தது; ஒல்கும் நுசுப்பு அஃக உருத்து வீங்கி - நுடங்கும் இடை குறையும்படி உருவங்கொண்டு பருத்து; சூழ்ஆரம் வைத்த முலையாள் நலம் சூழ்க என்றான் - சூழ்ந்த ஆரத்தைத் தாங்கின முலையாளின் நலத்தைத் தழுவுக என்றான்.
|
|
(வி - ம்.) ஏழண்டின் மேலும் இரண்டு ஆண்டு இரண்டு - பதினோராண்டு ஒல்கு நுசுப்பு - துவளும் இடை. அஃக - குறைய. ஆரம் - முத்துமாலை.
|
( 90 ) |
வேறு
|
| 1979 |
ஏற்ற கைத்தொடி வீழ்ந்தென வேந்தலைத் | |
தேற்றி னான்றிரு மாநலஞ் செவ்வனே | |
தோற்ற மாதருந் தோன்றலைக் காண்டலு | |
மாற்றி னாடன தாவியுந் தாங்கினாள். | |
|
|
(இ - ள்.) ஏற்ற கைத்தொடி வீழ்ந்தென - எடுத்த கையிலே ஒரு தொடி தானே வந்து வீழ்ந்த தன்மைபோல; ஏந்தலைத் தேற்றினான் - (நமக்கும் இது வந்தது என்று கருதும்படி அவன்) சீவகனை இவ்வாறு கூறித் தேற்றினான்; திருமா நலம் செவ்வனே தோற்ற மாதரும் - அழகாகிய பெரிய நலத்தை முற்றும் இழந்த விமலையும்; தோன்றலைக் காண்டலும் தனது ஆவியும் தாங்கினாள் - சீவகனைக் கண்ட அளவிலே தன் உயிரையும் போகாமல் தடுத்தாள்; ஆற்றினாள் - தன் தந்தை அவனுக்குக் கூறியதைக் கேட்ட அளவிலே ஆற்றுவதுஞ் செய்தாள்.
|
|
(வி - ம்.) திரு மா நலம் - திருமகளின் பேரழகு எனினும் ஆம். வீழ்ந்தது என : வீழ்ந்தென : தொகுத்தல் விகாரம்.
|
|
இரத்தற்கு ஏந்திய கையில் இடுவோர் கைத்தொடி வீழ்ந்தாற் போல என்பது கருத்து. ஏந்தலை : சீவகனை. தேற்றினான் என்றது சீவகனுக்குத் தெளிவுண்டாகுமாறு கணித நூலார் கூறியதும் அதன்படியே நிகழ்ந்ததும் கூறினான் என்றதாயிற்று. தோன்றலைக் காண்டலும் திருமாநலந் தோற்ற மாதரும் தந்தை கூறியது கேட்ட அளவின் ஆற்றினாள் ஆவியுந் தங்கினாள் என்க.
|
( 91 ) |