| விமலையார் இலம்பகம் |
1118 |
|
|
|
நீண்ட அழகிய மாடத்திலே; அகில்புகை அமளி ஏறி - அகிற் புகையுண்ட அணையிலே அமர்ந்து; பண் அமை மகரவீணை நரம்பு உெரீஇப் பாவை பாட - பண்ணமைந்த மரக யாழிலே நரம்பினைத் தடவிப் பாவை போல்வாள் பாட; மண் அமைமுழவுத் தோளான் - மண்ணுதலமைந்த முழவினைப் போன்ற தோளினான்; மகிழ்ச்சியுள் மயங்கினான் - இன்பக் களிப்பிலே மயங்கினான்.
|
|
(வி - ம்.) இதுமுதல் மற்றை நாளைப் புணர்ச்சி கூறுகின்றார். அதுவும் 'அமளி யேறி' என்றதனால், நீங்யிருந்து நாட்கடன் கழித்து எய்தினா ரென்றுணர்க. இங்ஙனம் இரண்டுநாள் ஈண்டுச் சென்றமை தோன்ற, மேலே, 'நாளிரண்டு சென்ற' (சீவக. 1995) என்றார்.
|
( 96 ) |
| 1985 |
இன்னரிச் சிலம்பொ டேங்கிக் | |
கிண்கிணி யிகலி யார்ப்பப் | |
பொன்னரி மாலை தாழப் | |
பூஞ்சிகை யவிழ்ந்து சோர | |
மின்னிருங் கலாபம் வீங்கி | |
மிளிர்ந்துகண் ணிரங்க வெம்பித் | |
துன்னருங் களிகொள் காமக் | |
கொழுங்கனி சுவைத்து விள்ளான். | |
|
|
(இ - ள்.) இன்னரிச் சிலம்பொடு ஏங்கிக் கிண்கிணி இகலி ஆர்ப்ப - இனிய பரல்களையுடைய சிலம்புடன் ஒலித்துக் கிண்கிணி மாறுபட்டு ஒலிப்ப; பொன் அரி மாலை தாழ - பொன்னரிமாலை தாழ்ந்திட; பூஞ்சிகை அவிழ்ந்து சோர - பூவையணிந்த முடி அவிழ்ந்து சோர்வுற; மின் இருங் கலாபம் வீங்கி மிளிர்ந்து கண் இரங்க - ஒளியை யுடைய பெரிய கலாபம் விம்மிப் பிறழ்ந்து ஒலிப்ப; வெம்பி - காம இன்பத்திலே அனன்று; துன்னருங் களி கொள் - கிடைத்தற்கரிய மகிழ்ச்சியைக் கொண்ட; காமக் கொழுங்கனி சுவைத்து விள்ளான் - காமமாகிய கொழுவிய கனியைச் சுவைத்துப் பகலெல்லாம் பிரியானாயினான்.
|
|
(வி - ம்.) கனி - சாரம். தாழ்தலானும் சோர்தலானும் ஊற்றினைச் சிறிது நீங்கின கரணமாம்.
|
( 97 ) |
| 1986 |
தொழித்துவண் டிமிருங் கோதை | |
துணைமுலை முள்கப் பூம்பட் | |
டழித்துமட் டொழுகுந் தாரான் | |
மணிவள்ளத் தாய்ந்த தேற | |
|