விமலையார் இலம்பகம் |
1119 |
|
|
1986 |
லெழிற்பொலி மாதர்க் கேந்த | |
வினிதினி னுகர்ந்து காமக் | |
கொழித்திரை கடலுண் மூழ்கிக் | |
கோதைகண் டுயின்ற வன்றே. | |
|
(இ - ள்.) தொழித்து வண்டு இமிரும் கோதை - சிதறி வண்டுகள் முரலுங் கோதையாளின்; துணை முலை பூம்பட்டு அழித்து முள்க - துணை முலைகள் பூம்பட்டை அழித்து நீங்காமல் முயங்கலின்; மட்டு ஒழுகும் தாரான் - தேனொழுகும் மாலையான்; மணிவள்ளத்து ஆய்ந்த தேறல் - மணிகளிழைத்த கிண்ணத்திலே ஆராய்ந்த மதுவை; எழில் பொலி மாதர்க்கு ஏந்த - அழகினால் விளங்கிய விமலைக்கு ஏந்த; இனிதினின் நுகர்ந்து - இனிதாகப் பருகி; காமக் கொழித்திரை கடலுள் மூழ்கி - காமமாகிய கொழித்து இரைக்குங் கடலிலே மூழ்கி; கோதை கண் துயின்ற - கோதையின் கண்கள் துயின்றன.
|
(வி - ம்.) தொழித்தல் - சிதறுதல். இமிரும் - முரலும். கோதை : விமலை. முள்குதல் - முயங்குதல்.
|
( 98 ) |
1987 |
பாசிலை சுருட்டி மைந்தன் | |
கொடுக்கிய பரந்து மின்னும் | |
தூசுலா மல்கு றீண்டத் | |
துயிற்கண்கள் விழித்த தோற்றம் | |
வாசவான் குவளை மெல்ல | |
வாய்விடா நின்ற தொக்கு | |
மேசுவ தொன்று மில்லா | |
விணைவட முலையி னாட்கே. | |
|
(இ - ள்.) பாசிலை சுருட்டி மைந்தன் கொடுக்கிய - வெற்றிலையை மடித்துச் சீவகன் விமலைக்குக் கொடுத்தற்கு; பரந்து மின்னும் தூசு உலாம் அல்குல் தீண்ட - பரவி மின்னும் ஆடை உலாம் அல்குலைத் தீண்டின அளவிலே; ஏசுவது ஒன்றும் இல்லா இணைவட முலையினாட்கு - குற்றம் சிறிதும் இல்லாத வட மணிந்து இணைந்த முலையாட்கு; துயில் கண்கள் விழித்த தோற்றம் - துயின்ற கண்கள் மலர்ந்த காட்சி; வாச வான் குவளை மெல்ல வாய்விடா நின்றது ஒக்கும் - மணமுறும் சிறந்த குவளை (முன்பு அலருந் தன்மையின்றி) மெல்ல அலருந்தன்மையை ஒக்கும்.
|
(வி - ம்.) வெற்றிலை மடித்துக் கொடுத்தற் கென்றது இடக்கர். புணர்ச்சிக்கண் நாண் தோன்றலின், தூசு நெகிழ்ந்து மேற்கிடந்தமை தோன்ற உலாவும் என்றார்.
|
( 99 ) |