பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 112 

அழித்த வேலவனே! ; கழிபெருங் காதலாள்கண் கழிநலம் பெறுக - நீ மிகப்பெருங் காதலியினிடத்திலே மிகவும் இன்பம் அடைக; பழிபடா வகையில் வையம் காக்கும் படுநுகம் பூண்பால ்என்றான்- (யான்) பழிவரா வகையில் நிலவுலகைக் காக்கும் பெரிய சுமையைப் பூண்பேன் என்று கட்டியங்காரன் கூறினான்.

 

   (வி - ம்.) தன் நினைவை அவன் காரியம்போற் கூறினான்.

 

   மார்பன் : சச்சந்தன். இற்று - இத்தன்மைத்து. 'வையம் இசை படக் காத்தல் வேண்டும்'. (201) என்ற மன்னனுக்கு 'வையம் பழிபடா வகையிற் காக்கும் படுநுகம் பூண்பல்' என்றதன்கண் கட்டியங்காரன் தன்னடக்கமும் நின்பொருட்டே இச் சுமையைப் பூண யான் இசையா நின்றேன் என்பதுந் தோன்றுதல் உணர்க.

( 174 )
204 வலம்புரி பொறித்த வண்கை மதவலி விடுப்ப வேகிக்
கலந்தனன் சேனை காவல் கட்டியங் கார னென்ன
வுலந்தரு தோளி னாய்நீ யொருவன்மேற் கொற்றம் வைப்பீ
னிலந்திரு நீங்கு மென்றோர் நிமித்திக னெறியிற் சொன்னான்.

   (இ - ள்.) வலம்புரி பொறித்த வண்கை மதவலி விடுப்ப ஏகி - வலம்புரி தீட்டிய வண்கையினாலே, மதவலியாகிய சச்சந்தன் காட்டி விடுப்பச் சென்று; சேனை காவல் கட்டியங்காரன் கலந்தனன் என்ன - சேனையைக் காப்பதிற் கட்டியங்காரன் சேர்ந்தான் என்று கூறக்கேட்டு; உலம்தரு தோளினாய் நீ ஒருவன் மேற் கொற்றம் வைப்பின் - கற்றூண் போன்ற தோளினாய்! நீ ஒருவனிடம் உன் ஆட்சியைச் சுமத்தினால்; நிலம்திரு நீங்கும் என்று - நிலமும் திருவும் நினைவிட்டுப் போய்விடும் என்று ; ஓர் நிமித்திகன் நெறியிற் சொன்னான் - ஒப்பற்ற நிமித்திகன் என்னும் அமைச்சன் நெறியுறக் கூறினான்.

 

   (வி - ம்.) [நச்சினார்க்கினியர் ஓர் என்பதற்கு 'நீயே ஆராய்ந்து பார்' என்று பொருள் கூறுவர். அதற்கு முடிபு, 'என்று ஓர்' என்பதனை 'ஓர் என்று' என மாற்ற வேண்டும்.]

 

   'பொறித்த' எனப் பிறவினையாற் கூறினார் அயன் படைத்தல் நோக்கி. மத: [வலியை] விசேடித்த உரிச்சொல். உலம் வளர்க்குந்தோள்.

 

   அரசற்குரிய அங்கம் ஆறனுள் படையே தலைசிறந்தது ஆதல்பற்றி அரசன் ஏவல் பெற்றவுடன் கட்டியங்காரன் படைஞரை வயப்படுத்து தற்றொழிலையே முதற்கண் மேற்கொண்டான் என்பது போதரத் தேவர் ”மதவலி விடுப்ப ஏகிக் கலந்தனன் சேனைகாவல் கட்டியங்காரன்” என்றோதுதல் உணர்க. மதவலி : அன்மொழித்தொகை : சச்சந்தன்.

 

   'நீ' என்றது அரசுரிமையுடைய நீ என்பதும் 'ஒருவன்' என்றது ஏதிலான் ஒருவன் என்பதும்பட நின்றமை நினைக.

( 175 )