பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1120 

1988 கங்குற்பாற் புகுந்த கள்வ
  னிவனெனக் கதுப்பிற் றாழ்ந்த
தொங்கலான் முன்கை யாத்துச்
  சொல்லுநீ வந்த தென்ன
நங்கையான் பசித்து வந்தே
  னெப்பொரு ணயப்ப தென்றாட்
கங்கலுழ் மேனி யாய்நின்
  னணிநல வமிழ்த மென்றான்.

   (இ - ள்.) கங்குல்பால் புகுந்த கள்வன் இவன் என்று - இரவிலே புகுந்த கள்வன் இவனென்று கூறி; கதுப்பில் தாழ்ந்த தொங்கலான் முன்கை யாத்து - கூந்தலில் தங்கிய மாலையினால் அவன் முன்கையைக் காட்டி; நீ வந்தது சொல்லு என்ன - இனி நீ வந்த வேலையைக் கூறு என்று வினவ; நங்கை! யான் பசித்து வந்தேன் - நங்கையே! யான் பசியால் வந்தேன் (என்று கூற); எப்பொருள் நயப்பது என்றாட்கு - எப்பொருளை நீ விரும்புவது என்றாட்கு; அம் கலுழ் மேனியாய்! நின் அணிநல அமிழ்தம் என்றான் - அழகொழுகும் மெய்யினாய்! நின் அழகாகிய அமிழ்தம் முழுதும் என்றான்.

   (வி - ம்.) பசித்துண்பார்க்கு உணவுகள் பல என்பது தோன்ற, எப்பொருள் என்றாள். துயில் மயக்கமாதலின் தானறியாமற் புகுந்த கள்வன் என்று அசதியாடினாள்.

( 100 )
1989 செயிர்த்தவள் சிவந்து நோக்கிச்
  சீறடி சென்னி சோ்த்தி
யயிர்ப்பதென் பணிசெய் வேனுக்
  கருளிற்றுப் பொருள தென்ன
வுயிர்ப்பது மோம்பி யொன்று
  முரையலை யாகி மற்றிப்
பயிர்ப்பில்பூம் பள்ளி வைகு
  பகட்டெழின் மார்ப வென்றாள்.

   (இ - ள்.) செயிர்த்தவள் சிவந்து நோக்கி - (நின்னலம் என்றதனாற் ) சீற்றங் கொண்டவள் கண் சிவந்து பார்க்க; சீறடி சென்னி சேர்த்தி - அவள் சிற்றடியிலே தன் முடியை வைத்து; அயிர்ப்பது என்? - என்னை ஐயுறுதல் ஏன்?; பணிசெய்வேனுக்கு அருளிற்றுப் பொருள் அது என்ன - நின் ஏவல் செய்வேனுக்கு நீ அருளியது யாது ஒன்று அதுவே பொருள் என்ன; பயிர்ப்புஇல் பகட்டு எழில் மார்ப! - அருவருப்பை அறியாத