பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1121 

பெருமை பொருந்திய அழகிய மார்பனே!; உயிர்ப்பதும் ஓம்பி - நீ இறந்துபடுதலையும் தவிர்த்து; ஒன்றும் உரையலை ஆகி - ஒன்றும் கூறாமல்; இப்பூம் பள்ளி வைகு என்றாள் - இந்த மலரணையிலே தங்குக என்றாள்.

   (வி - ம்.) முன்னர் நின்னலம் என்றதனால், பிறர் நலமின்றி நின்னலம் என்பது போதருதலின் அது செயிராயிற்று. நோக்கி - நோக்க. அது பொருள் என்றான், 'நீ இறந்துபடுக' என்று நீ கூறினும் அதுவே எனக்குப் பொருள் என்பது தோன்ற. எனவே, ஊடலும் கூடலும் கூறினாரென்க.

( 101 )
1990 உள்ளிழு துடைய வெம்பி
  யுற்பல வுருவு கொண்ட
வெள்ளியிற் புனைந்த கோல
  விளக்கொளி வெறுவி தாக
வள்ளிதழ்க் கோதை வல்லான்
  வட்டிகை நுதியின் வாங்கிப்
பள்ளிமே லெழுதப் பட்ட
  பாவைபோ லாயி னாளே.

   (இ - ள்.) வெள்ளியிற் புனைந்த கோல விளக்கு - வெள்ளியாற் செய்த அழகிய விளக்கு; உள் இழுது உடைய வெம்பி - இழுது உடையும்படி தீ மிகுந்து எரிதலின்; உற்பல உருவு கொண்ட ஒளி வெறுவிதாக - அரக் காம்பலின் வடிவைக் கொண்ட ஒளி, விடியற்கால மாதலின் அவ்வொளி கெட; வள் இதழ்க் கோதை - வளவிய இதழையுடைய கோதையினாள்; வட்டிகை நுதியின் வாங்கி - துகிலிகை நுனியாலே வட்டிகைப் பலகையினின்றும் நீக்கி; பள்ளிமேல் எழுதப்பட்ட பாவை போல் ஆயினாள் - பள்ளியின் மேல் எழுதப்பட்ட பாவையாயினாள்.

   (வி - ம்.) 'வாங்குதல்' ஈண்டு நீக்குதற்பொருளது. இனி, 'கட்டிலேறிய' என்னுஞ் செய்யுள் முதலியவற்றை ஒருநாளைக் கூட்டமாக்கி உரைப்பாருமுளர்.

( 102 )

வேறு

1991 மங்கையர் பண்ணிய மருத யாழ்குழ
னங்கையைப் பிரியுமிந் நம்பி யின்றென
வங்கதற் கிரங்கின வாரும் பேதுறக்
கங்குல்போய் நாட்கடன் கழிந்த தென்பவே.

   (இ - ள்.) ஆரும் பேதுற - கூடியிருந்தோ ரெல்லோரும் பிரிவை நினைந்து வருந்த; மங்கையர் பண்ணிய மருதயாழ்