விமலையார் இலம்பகம் |
1122 |
|
|
குழல் - மங்கையர் இசைத்த மருதயாழும் குழலும்; இந் நம்பி நங்கையை இன்று பிரியும் என - இந் நம்பி இவளை இன்று பிரிவான் என்று; அங்கு அதற்கு இரங்கின - அங்கே அதற்காக இரங்கின போன்றன; கலங்குல்போய் நாள் கடன் கழிந்தது - இரவு விலகக், காலைக்கடனும் முடிந்தது.
|
(வி - ம்.) மருதம் - காலைப்பண். போய் - போக.
|
பண்ணிய - இசைத்த. மருதயாழ் - மருதம் என்னும் காலைப் பண்ணை இசையாநின்ற யாழ் என்க குழல் - வேய்ங்குழல். நங்கை : விமலை; நம்பி : சீவகன் அதற்கு - அப்பிரிவிற்கு. ஆரும் - யாரும். பேது - துன்பம். போய் - போக.
|
( 103 ) |
1992 |
ஏந்துபூங் கோதைக டிருத்தி யோ்படச் | |
சாந்துகொண் டிளமுலை யெழுதித் தையறன் | |
காந்தள முகிழ்விரல் கையி னாற்பிடித் | |
தாய்ந்தவட் கிதுசொலு மலங்கல் வேலினான். | |
|
(இ - ள்.) அலங்கல் வேலினான் - மாலையணிந்த வேலினான். ஏந்து பூங்கோதைகள் ஏர்படத் திருத்தி - ஏந்திய பூங்கோதை அழகுறத் திருத்தி; சாந்து கொண்டு இளமுலை எழுதி - சந்தனங் கொண்டு இளமுலையிலே எழுதி; தையல் தன் காந்தள் அம்முகிழ் விரல் கையினால் பிடித்து - தையலின் காந்தளின் அழகிய அரும்புபோலும் விரலைக் கையினாற் பற்றி; அலங்கல் வேலினான் அவளுக்கு ஆய்ந்து இதுசொலும் - மாலையணிந்த வேலினான் அவளும் ஆராய்ந்து இதனைக் கூறுவான்.
|
(வி - ம்.) ஏர் - அழகு. ஏர்படத்திருத்தி என மாறுக. முலையிற்றொய்யிலெழுதி என்க. முகிழ் - அரும்பு. ஆய்ந்து - ஆராய்ந்து துணிந்து என்க. அவட்கு : விமலைக்கு.
|
( 104 ) |
1993 |
பூவினுட் டாழ்குழற் பொன்செ யேந்தல்குன் | |
மாவினுட் டாழ்தளிர் மருட்டு மேனியாய் | |
காவினுட் டோழரைக் கண்டு போதர்வே | |
னேவினுட் டாழ்சிலை யெறிந்த கோலினே. | |
|
(இ - ள்.) பூவினுள் தாழ் குழல் - பூவினுள் தங்கிய குழலையும்; பொன் செய் ஏந்து அல்குல் - மேகலையணைந்த அல்குலையும் உடைய; மாவினுள் தாழ் தளிர் மருட்டும் மேனியாய்! - மாந்தளிரை மயக்கும் மேனியினாய்!; ஏவினுள் தாழ்சிலை எறிந்த கோலின் - ஏவுந் தோழிற் குறைந்த வில்லெய்த அம்புபோல; காவினுள் தோழரைக் கண்டு போதர்வேன் - காவிலே என் தோழரைக் கண்டு மீளுவேன்.
|