| விமலையார் இலம்பகம் |
1123 |
|
|
|
(வி - ம்.) செய்பொன் - மேகலை. 'தாழ்சிலை எறிந்த கோலின்' - இதனை அவள் அணித்தே சென்று விரைந்து வருவான் எனக் கூறியதாக நினைத்தற்கும், அவன் வலியிலாதான் எய்த அம்பு அவனிடத்தே திரும்பிவாராமை போலத் தான் வேறிடத்துச் செல்லுதற்கும் உவமையென எண்ணினர்.
|
( 105 ) |
| 1994 |
என்றவ னுரைத்தலு மெழுது கண்மலர் | |
நின்றநீ ரிடைமணிப் பாவை நீந்தலின் | |
மன்றனா றரிவையைத் தெருட்டி மாமணிக் | |
குன்றனான் கொடியவள் குழைய வேகினான். | |
|
|
(இ - ள்.) என்று அவன் உரைத்தலும் - என்று அவன் கூறினானாக; எழுது கண்மலர் நின்ற நீரிடை மணிப்பாவை நீந்தலின் - மை யெழுதிய கண் மலரில் ததும்பி நின்ற நீரிலே கண்மணிப் பாவை நீந்துதலின்; மாமணிக் குன்றனான் மன்றல் நாறு அரிவையைத் தெருட்டி - பெரிய மணிக் குன்றனைய சீவகன் மணங் கமழும் அவளைத் தெளிவித்து; கொடியவள் குழைய ஏகினான் - அவள் வருந்தத் தான் சென்றான்.
|
|
(வி - ம்.) அவன் : சீவகன். கண்மணியின் கட்பாவை என்க. மன்றல் - மணம். அரிவையை : விமலையை. குன்றனான் : சீவகன். (கொடிவள்) கொடிபோல்பவன் என்க.
|
( 106 ) |
|
விமலையார் இலம்பகம் முற்றிற்று.
|