| சுரமஞ்சரியார் இலம்பகம் | 
1127  | 
 | 
  | 
| 1995 | 
டோளி ரண்டு மன்ன தோழர் |   | 
தோன்ற லைப்பு ணாந்தபின் |   | 
றாளி ரண்டு மேத்தி நின்று |   | 
தைய னாமம் வேண்டினார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வாள் இரண்டு மாறு வைத்த போல் மழைக்கண் மாதரார் - இரண்டு வாட்களை எதிராக வைத்தன போலக் குளிர்ந்த கண்களையுடைய (காவிலுள்ள) மங்கையர்; நாள் இரண்டு சென்ற என்று நைய - நாட்கள் இரண்டு சென்றன என்று வருந்த; மொய் கொள் காவினுள் - மரம் நெருங்கிய பொழிலில்; தோளிரண்டும் அன்ன தோழர் - சீவகனுடைய இரு தோளையும் போன்ற தோழர்; தோன்றலைப் புணர்ந்தபின் - சீவகனைக் கூடியபின்னர்; தாளிரண்டும் ஏத்தி நின்று தையல் நாமம் வேண்டினார் - இரண்டு தாள்களையும் போற்றி நின்று அவன் மணந்த தையலின் பெயரைக் கூறுக என்றனர். 
 | 
| 
    (வி - ம்.) மாதரார் : கூடவந்த போக மாதர்கள். 
 | 
| 
    இனி, விமலையிடத்து ஒருநாளைக் கூட்டமே கொள்ளின், மாதரார் இருநாள் நைய, இவர்கள் தையல் யாரென வினவிப் பின்னும் சுரமஞ்சரி இடம் விடுத்ததாகக் கொள்க. எனவே விமலையிடம் ஒரு நாளும் சுரமஞ்சரியிடம் ஒருநாளும் கணக்காயின. 
 | 
( 1 ) | 
| 1996 | 
பாடுவண் டிருந்த வன்ன பல்கலை யகலல்குல் |   | 
வீடு பெற்ற வரும் வீழும் வெம்மு லைவி மலையென் |   | 
றாடு வான ணிந்த சீர ரம்பை யன்ன வாணுத |   | 
லூடி னும்பு ணாந்த தொத்தி னியவளு ளாளரோ. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) பாடு வண்டு இருந்த அன்ன பல்கலை அகல் அல்குல் - முரலும் வண்டுகள் தங்கினாற்போலப் பல மணிகளையுடைய மேகலையையுடைய அகன்ற அல்குலையும்; வீடு பெற்ற வரும் வீழும் வெம்முலை - துறந்தவரும் இல்லறம் புக விழையும் வெம்முலைகளையும்; ஆடுவான் அணிந்த சீர் அரம்பை அன்ன - ஆடுவதற்கணி செயப் பெற்றாலன்ன சிறப்பினையுடைய அரம்பையைப் போன்ற; வாணுதல் விமலை என்று - வாணுதலாள் விமலை என்று பெயர் கூறப்பட்டு; ஊடினும் புணர்ந்தது ஒத்து இனியவள் உளாள் - ஊடினாலும் கூடினாற் போன்ற இனியவள் இருக்கின்றனள். 
 | 
| 
    (வி - ம்.) ஊடல் கடிதின் தீர்தலிற் கூடல் போன்றது. 'வண்டிருப்பன்ன பல்காழ் அல்குல்' (பொரு-39) என்றார் பிறரும். வீடு பெற்றவர் - இல்வாழ்வினின்று விடுதலை பெற்றவர் : துறவிகள். பெற்ற வரும் - என்பதிலுள்ள உம்மை உயர்வு சிறப்புப் பொருளது. ஆடுவான் : வான் விகுதிபெற்ற வினையெச்சம். 
 | 
( 2 ) |