| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1130 |
|
|
| 2001 |
காமனே செல்லினுங் கனன்று காண்கிலாள் | |
வேமெனக் குடம்பெனும் வேங்கொ டோளியை | |
யேமுறுத் தவணல நுகரி னெந்தையை | |
யாமெலா மநங்கமா திலக னென்றுமே. | |
|
|
(இ - ள்.) காமனே செல்லினும் காண்கிலாள் - காமனேவரினும் அவனைக் காணாதவளாய்; கனன்று வேம் எனக்கு உடம்பு எனும் - கனன்னு வேகும் என்னுடம்பு என்கிற; வேய்கொள் தோளியை ஏமுறுத்து - மூங்கிலனைய தோளியை மயக்குறுத்தி; அவள் நலம் நுகரின் - அவளழகைப் பருகிவரின்; யாம் எலாம் எந்தையை அநங்க மாதிலகன் என்றும் - யாமெல்லோரும் நம் எந்தையைக் காமதிலகனென்று கூறுவோம்.
|
|
(வி - ம்.) அநங்கமா திலகன் : மா, 'தட்குமா காலே' (புறநா-193) என்றாற் போல அசையாய் நின்றது.
|
|
எனக்கு உடம்பு வேம் எனும் என மாறுக. வேம் - வேகும். ஏமுறுத்து - மயக்கி. எந்தையை என்றது சீவகனை : முன்னிலைப் படர்க்கை.
|
( 7 ) |
வேறு
|
| 2002 |
தாசியர் முலைக டாக்கத் | |
தளையவிழ்ந் துடைந்த தண்டார் | |
வாசங்கொண் டிலங்கு முந்நூல் | |
வலம்படக் கிடந்த மார்ப | |
பேசிய பெயரி னாளைப் | |
பேதுறா தொழிவே னாகி | |
னாசுமன் பிலாத புன்பெண் | |
கூந்தல்யா னணைவ லென்றான். | |
|
|
(இ - ள்.) தாசியர் முலைகள் தாக்கத் தளை அவிழ்ந்து உடைந்த - சேடியரின் முலைகள் பொருதலாற் பிணிப்பு நெகிழ்ந்து விரிந்த; தண் தார் வாசம் கொண்டு இலங்கும் முந்நூல் வலம் படக் கிடந்த மார்ப! - தண்ணிய மாலை மணங் கமழ்ந்து, விளங்கும் முந்நூலுடன் வெற்றியுறக் கிடந்த மார்பனே!; பேசிய பெயரினாளைப் பேதுறாது ஒழிவேனாகின் - நீ கூறிய பெயருடையாளை மயக்கமுறுத்தாமல் விடுவேனாகில்; ஆசும் அன்பு இலாத புன் பெண் கூந்தல் மான் அணைக என்றான் - சிறிதும் அன்பு கொள்ளாத இழிந்த பெண்ணின் கூந்தலை யான் தழுவுக என்றான்.
|
|
(வி - ம்.) அவனைப் போலவே சீவகனும் நகையாடி வஞ்சினங் கூறினான்.
|