| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1131 |
|
|
|
தாசியர் - பணிமகளிர். தாசியர் முலைகள் தாக்க உடைந்த தார் மார்ப என்றது அசதியாடியது. பெயரினாளை என்றது சுரமஞ்சரியை என்றவாறு. பேதுறுத்தாது எனற்பாலது பேதுறாது என நின்றது. ஆசும் - சிறிதும். புன்பெண் - கீழ்மகள்.
|
( 8 ) |
| 2003 |
வண்டுதேன் சிலைகொ ணாணா | |
மாந்தளிர் மலர்க ளம்பாக் | |
கொண்டவன் கோட்டந் தன்னுட் | |
கொடியினைக் கொணர்ந்து நீல | |
முண்டது காற்றி யாண்பே | |
ரூட்டுவ லுருவக் காமன் | |
கண்டபொற் படிவஞ் சார்ந்து | |
கரந்திரு நாளை யென்றான். | |
|
|
(இ - ள்.) வண்டு தேன் சிலைகொள் நாணா மலர்கள் அம்பாக் கொண்டவன் - வண்டுந் தேனும் வில்கொண்ட நாணாக, மலர்கள் அம்பாகக் கொண்டவனுடைய, கோட்டந் தன்னுள் மாந்தளிர்க் கொடியினைக் கொணர்ந்து - கோயிலிலே மாந்தளிரைப் போன்ற மேனியையுடைய கொடியைக் கொண்டுவந்து - நீலம் உண்டது காற்றி - வெண்ணூல் நீலமுண்டதனை உமிழ்ந்தாற் போல அவள் புதிதாகக் கொண்ட கோட்பாட்டைப் போக்கி; ஆண்பேர் ஊட்டுவல் - அவள் இயல்பாகக் கோடற்குரிய ஆண் பெயரை ஊட்டுவேன்; உருவக் காமன் கண்ட பொன் படிவம் சார்ந்து - வடிவையுடைய காமனாகப் பொன்னாற் செய்த வடிவத்தைச் சார்ந்து; நாளை கரந்திரு என்றான் - நாளை மறைந்திரு என்றான்.
|
|
(வி - ம்.) காற்றி யென்றதற் கேற்ப ஊட்டுவேன் என்றான். 'சிலைகள்' என்ற பாடம் இருப்பின் சேமவில்லைக் கூட்டுக.
|
( 9 ) |
வேறு
|
| 2004 |
இழைக்கண் வெம்முலை யிட்டிடை யேந்தல்குன் | |
மழைக்கண் மாதரை மாலுறு நோய்செய்வான் | |
முழைக்கண் வாளரி யேறன மொய்ம்பினா | |
னுழைக்க ணாளர்க் குரைத்தெழுந் தானரோ. | |
|
|
(இ - ள்.) முழைக்கண் வாள் அரி வேறு அன மொய்ம்பினான் - குகையிலுள்ள கொடிய சிங்க வேற்றைப் போன்ற வலிமையுடையான்; இழைக்கண் வெம்முலை இட்டிடை ஏந்தல்குல் மழைக்கண் மாதரை - அணிகளைத் தன்னிடத்தே கொண்ட வெவ்விய முலைகளையும் சிற்றிடையையும் ஏந்திய அல்குலையும்
|