பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1132 

குளிர்ந்த கண்களையும் உடைய சுரமஞ்சரியை; மாலுறுநோய் செய்வான் - மயக்கம் பொருந்திய நோயை உண்டாக்குவதற்கு; உழைக்கணாளர்க்கு உரைத்து எழுந்தான் - அருகிலிருக்குங் கண் போன்றவர்களுக்குக் கூறி எழுந்தான்.

   (வி - ம்.) இழை - அணிகலன். இட்டிடை - சிற்றிடை. மழைக்கண் - குளிர்ச்சியுடைய கண். மாதரை : சுரமஞ்சரியை. மால் - மயக்கம். அரியேறு - ஆண்சிங்கம். உழைக்கணாளர். நண்பர் அரோ : அசை.

( 10 )
2005 சோருங் காரிகை யாள்சுர மஞ்சரி
யாரஞ் சூடிய வம்முலைப் பூந்தடந்
தாகு மார்பமுந் தண்ணெனத் தோய்வதற்
கோரு முள்ள முடன்றெழு கின்றதே.

   (இ - ள்.) சோரும் காரிகையாள் சுரமஞ்சரி - ஒழுகும் அழகுடையாளாகிய சுரமஞ்சரியின்; ஆரம் சூடிய அம்முலைப் பூந்தடம் - ஆரம் அணிந்த அழகிய முலைகளாகிய பூந்தடத்திலே; தாரும் மார்பமும் தண் எனத் தோய்வதற்கு - மாலையும் மார்பும் குளிரத் தழுவுதற்கு; ஓரும் - உள்ளம் - அவள் வடிவை இங்ஙனம் இருக்கும் என ஆராயும் உள்ளம்; உடன்று எழுகின்றது - வருந்தி எழுகின்றது.

   (வி - ம்.) இச் செய்யுள் சீவகன் கூற்றாக அமைந்தது. நூலாசிரியர் கூற்றாகக் கொள்ளினும் அமையும். கனகபதாகை ஆண்டுக் கூறலானும் ஈண்டுப் புத்திசேனன் கூறலானும் ஊழானும் வருந்தி அவன் வடிவை ஓரும் என்றார்.

   காரிககை - அழகு; அழகொழுகும் சுரமஞ்சரி என்றவாறு. ஆரம் - முத்துமாலை. தார் - மாலை. தண்ணென - குளிரும்படி. ஓரும் - ஆராயா நிற்கும்.

( 11 )

வேறு

2006 கடைந்தபொற் செப்பெனக் கதிர்த்து வீங்கின
வடஞ்சுமந் தெழுந்தன மாக்கண் வெம்முலை
மடந்தைதன் முகத்தவென் மனத்தி னுள்ளன
குடங்கையி னெடியன குவளை யுண்கணே.

   (இ - ள்.) கடைந்த பொன் செப்பு எனக் கதிர்த்து வீங்கின - கடைந்த பொற் கிண்ணம் போலக் கதிருடன் பருத்தனவும்; வடம் சுமந்து எழுந்தன மாக்கண் வெம்முலை - வடத்தைச் சுமந்து வளர்ந்தனவும் ஆகும் பெரிய கண்களையுடைய வெம்முலைகள்; குவளை உண்கண் - குவளையனைய மையுண்ட கண்கள்; குடங்கையின் நெடியன - உள்ளங்கையினும் பெரியனவாகி;